ராமர் என்பவர் பிரச்சினை அல்ல.. பிரச்சினைகளுக்கு தீர்வு தருபவர்.. உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர் மோடி!

Jan 22, 2024,06:58 PM IST
அயோத்தி:  ராமர் என்பவர் பிரச்சினைக்குரியவர் அல்ல.. பிரச்சனைகளுக்கு தீர்வு தருபவர்..
கோயில் கட்ட பாடுபட்ட கரசேவகர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்.. என உணர்ச்சி பொங்க பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .

அயோத்தியில் இன்று பால ராமர் சிலையை சிறப்பாக பிரதிஷ்டை செய்து வைத்தார் பிரதமர் மோடி. இதன் பின்னர் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து புதிய பால  ராமர் சிலையின் கண்களில் இருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு, ராமர் சிலையின் பாதங்களில் தாமரை மலர் வைத்து பிரதமர் பூஜை செய்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கோவில் முழுவதும் மலர் தூவப்பட்டது. அனைவரும் ராமா ராமா  கூறி பிரார்த்தனை செய்தனர். பிரதமர் ராமர் சிலையின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார்.



ராமரின் சிலையை அழகான சிறுவன் சிரிப்பது போன்று மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். ராமர் தலையில் கிரீடம், கையில் வில் அம்புடன் காட்சியளிக்கிறார். நகை அலங்காரத்துடன் ராமரின் சிலை ஜொலி ஜொலிக்கிறது.

பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து முடித்த பிறகு, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். இவரை தொடர்ந்து பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:

அயோத்திக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் யோகிகள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த அற்புதமான நாளில் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இன்று தான் தீபாவளி. ராமர் கோவில் கட்டுவதற்காக பாடுபட்ட  கரசேவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இன்று அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டதால் இந்தியாவில் புதிய சகாப்தம், நம்பிக்கை பிறந்துள்ளது. இனி ஒரு காலத்திலும் ராமர் கொட்டகையில் குடி கொள்ள மாட்டார். ஏராளமான தியாகங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
 


இந்தியா புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. ராமர் கோவில் திறப்பின் மூலம் அடிமை மனநிலைக்கு முடிவு கட்டியுள்ளோம். நமது தியாகத்தில் சிறிய குறைபாடு இருந்தது. ராமர் என்பது பிரச்சனைக்கானவர் அல்ல. பிரச்சனைகளுக்கு தீர்வு தருபவர். காலங்கள் கடந்தாலும் ராமர் என்றும் நிலைத்திருப்பார். ராமர் என்பது நெருப்பு அல்ல. ஒரு சக்தி. இன்று நாளை என ஆயிரம் ஆண்டுகள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

ராமனின் புகழ் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ளது. பல நூற்றாண்டு கால தியாகங்களுக்கும், பொறுமைக்கும் இன்று பலன் கிடைத்துள்ளது. தாமதமாக கோயில் கட்டியதற்காக ராமர் நம்மை மன்னிப்பார் என நம்புகிறேன். ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தார். ராமர் வருகைக்காக அயோத்தி பல காலம் காத்திருந்தது. பல ஆண்டுகாலம் கழித்து ராமர் திரும்பி வந்துவிட்டார். சட்டப்படியே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு நன்றி. பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார். ராமர் பகவான்கி ஜெய் எனக் கூறி விடை பெற்றார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்