நாடுதான் முதலில்.. நாட்டை முன்னேற்ற உறுதி எடுப்போம்.. பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல்

Aug 15, 2024,03:29 PM IST

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது நாடுதான் முதலில். நாடுதான் எல்லாம். நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல அனைவரும் உறுதி எடுப்போம் என்று பிரதமர் மோடி பேசினார்.


இன்று நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய அடையாளமான டர்பன் அணிந்து அவர் வந்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் பிரதமர் மோடி ஆற்றிய உரையிலிருந்து:




இயற்கைச் சீற்றங்களால் கேரள மாநிலம் வயநாடு மிகப் பெரும் நிலச்சரிவையும், பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது. தங்களது குடும்பத்தில் பலரைப் பறி கொடுத்து மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பலர் குடும்பங்களையே இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இயற்கைச் சீற்றங்கள் கடந்த சில வருடங்களாக பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாடு எப்போதும் துணை நிற்கும்.


நமது நாடு அடிமைத் தளையிலிருந்து விடுபட்டபோது 40 கோடி மக்கள் தொகையுடன் இருந்தது. ஆனால் இன்று 140 கோடியாக அது உயர்ந்துள்ளது. 140 கோடி பேருடன் அது வளர்ந்த நாடாக முடியும். அதற்கான பாதையில்தான் நாம் நடந்து வருகிறோம். நமது நாடு விடுதலையாக வேண்டும் என்பதற்காக நாம் உயிரை விட்டுப் போராடவும் துணிந்தோம். அதேபோல நமது நாடு வாழ வேண்டும் என்பதற்காகவும் நாம் நம்முடையை ஒற்றுமையை வலிமையாக வெளிப்படுத்தி இணைந்து நடை போட முடியும்.


விக்சித் பாரத் என்பது எனது அரசின் வெறும் முழக்கம் மட்டும் அல்ல. அதை நாங்கள் சாதித்துள்ளோம். எங்களது இலக்குகளை அடைய கடுமையாக உழைத்துள்ளோம். நாடுதான் நமக்கு முதலில். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.


முந்தைய அரசுகள் அலட்சிய மனோபாவத்துடன்  திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வந்தனர். அப்படித்தான் பல வருடங்களை நாம் கண்டோம். அந்த  மன நிலையை உடைக்க வேண்டியிருந்தது. அதை நாங்கள் உடைத்தோம். சாதாரண மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது. அவர்களது கணவுகள் நிறைவேற அவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. சீர்திருத்தங்களுக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் அந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஏழைகளுக்காக, நடுத்தர மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, இளைஞர்களுக்காக நாங்கள் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தோம்.


இன்று நமது நாடு வீரத்துடனும், தீரத்துடனும் நாட்டை முன்னோக்கி நடை போட வைத்துள்ளது. நமது படை வீரர்களுக்கும், நமது விவசாயிகளுக்கும், நமது இலைஞர்களுக்கும், நான் இதற்காக சல்யூட் செய்கிறேன். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நமது நாடு கடன் பட்டுள்ளது. அவர்களது தியாகத்தை நினைவு கூற வேண்டிய நாள் இது.


உள்ளூருக்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. தன்னிறைவு குறித்து நாம் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உற்பத்திப் பொருள் என்ற நிலையை நாம் அடைந்திருக்கிறோம். நமது நாட்டின் இளைஞர்கள் வேகமாக செயல்பட விரும்புகிறார்கள். அவர்கள் மெதுவாக செல்ல விரும்பவில்லை. இது நமது நாட்டின் பொற்காலம்.




கொரோனா போன்ற பேரிடரின்போது மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய ஓடி வந்தனர். நமது கொரோனா வீரர்கள் நாட்டுக்காக உழைத்தனர். மக்களுக்காக உழைத்தனர். நமது படை வீரர்கள், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின்போது தீரத்துடன் செயல்பட்டனர். ஒவ்வொரு இந்தியரையும் தலை நிமிர்ந்து நடக்க வைத்தனர்.


3வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் எங்களது அரசின் ஒரே செய்தி.. மக்களுக்காக, அனைவருக்குமாக, ஒவ்வொரு குடும்பத்துக்காக நாங்கள் பாடுபடுவோம். நாட்டை புதிய உயரத்திற்கு இட்டுச் செல்வோம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.


11வது முறையாக தொடர்ச்சியாக உரை


பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆற்றிய சுதந்திர தின உரையானது அவரது 11வது உரையாகும். தொடர்ச்சியாக 11வது முறையாக அவர் சுதந்திர தின உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 3வது முறையாக பிரதமரான பிறகு அவர் ஆற்றிய முதல் சுதந்திர தின உரையாகும்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்