தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவு தளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி கோவை நேற்று பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மாலை ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்து சிறு குறு தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பளம் வரவேற்புடன், பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. 30 நிமிடம் தரிசனம் செய்த பிறகு, மதுரை ஆதீனத்திற்கு சென்று அங்கு வழங்கிய மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு முதன்மையாக காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ உ சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். இங்கு முதன் முதலாக சிறிய வகை சவுண்டிங் ராக்கெட்டை ஏவுதற்கு இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம், கடல் நீரை நன்னீராக மாற்றுதல், மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி மையம் உள்ளிட்டவைக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
தமிழகத்திற்கு மொத்தம் 17 , 300 கோடி மதிப்பிலான திட்டங்களையும், அதில் 4,586 கோடி செலவில் நான்கு வழிச்சாலை திட்டங்களையும் தமிழகத்திற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
நெல்லையில் பிரமாண்ட பாஜக கூட்டம்
தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் காலை 11:10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி பாளையங்கோட்டைக்குச் செல்கிறார். அங்கு பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்
சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
{{comments.comment}}