ககன்யான் பயணம்.. 4 இந்திய விண்வெளி வீரர்களை அறிமுகப்படுத்தினார் .. பிரதமர் நரேந்திர மோடி!

Feb 27, 2024,02:26 PM IST

டில்லி : விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 4 இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். 


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது விண்வெளிக்க பயணம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு வீரர்களுக்கும் இறகுகளை வழங்கி, அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். 




குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜீத் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு வீரர்கள் தான் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மூன்று வீரர்கள் கொண்ட சிறிய குழுவை விண்கலத்தில் அனுப்பி, அந்த விண்கலத்தை பூமியின் குறைந்த சுற்றுவட்ட பாதையில் செலுத்தி, மூன்று நாட்களுக்கு பிறகு அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதே இந்த ஆய்வின் முதல் கட்ட நோக்கமாகும். இந்த ஆய்வு பணிக்காக தான் இந்த நான்கு விண்வெளி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆய்வு பணியின் போது அவர்கள் நன்றாக இருப்பதை உறுதி செய்வதற்காக தொழில்நுட்ப அணிவு மற்றும் உடல் தகுதி ஆகியவற்றில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


வீரர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய பிரதமர் மோடி, "இவர்கள் நான்கு பெயர்களோ, நான்கு பேர்களோ அல்ல. நான்கு சக்திகள். விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற 140 கோடி இந்திய மக்களின் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்ற போகிறவர்கள். நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்கு செல்கிறார். ஆனால் இந்த முறை நேரம், கவுண்டவுன், ராக்கெட் ஆகிய அனைத்தும் நமக்கு சொந்தமானது.




உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ள நேரம் இது. இந்த ககன்யான் மிஷன் இந்தியாவை விண்வெளி துறையில் புதிய உச்சத்திற்கு கொண்ட செல்லும் . விண்வெளி துறையில் இந்திய பெண் விஞ்ஞானிகள் மிக முக்கியமாக பங்காற்றி வருகிறார்கள். சந்திரயான் ஆகட்டும், ககன்யான் ஆகட்டும் எந்த திட்டமாக இருந்தாலும் பெண் விஞ்ஞானிகள் இல்லாமல் அந்த திட்டத்தை நினைத்து பார்க்கக் கூட முடியாது என்றார் பிரதமர் மோடி.


இதற்கு முன் 1984 ம் ஆண்டு விங் கமாண்டர் ராகேஷ் சர்மா என்பவர் தான் விண்வெளிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டவர் ஆவார். மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் ராகேஷ் சர்மா விண்வெளிக்குப் போய் வந்தார். ஆனால் அது ரஷ்யா நடத்திய ஆய்விற்கு அனுப்பப்பட்டார்.   சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று திரும்பினார் ராகேஷ் சர்மா.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்