சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பிரதமர் மோடி.. மோகன்லால், மம்முட்டியுடன் சந்திப்பு!

Jan 17, 2024,04:02 PM IST

குருவாயூர்: கேரளாவில்  உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்திலும் கலந்து கொண்டார். அப்போது நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரையும் அவர் சந்தித்தார்.


இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர்  மோடி குருவாயூர் சென்றார். அவரை பா.ஜ.க.,வின் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். அவர் வரும் வழி நெடுகிலும் ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் காத்திருந்து பிரதமரை வரவேற்றனர். காலையில் குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்தார். 


அதன் பின்னர் பா.ஜ.க., எம்பியும், நடிகருமான  சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, தமிழ்நாட்டு நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு உள்ளிட்டோர் திருமண விழாவில் பங்கேற்றனர். அவர்களையும் பிரதமர் சந்தித்து உரையாற்றினார்.




பிரதமர் மோடிக்கு, நடிகர் சுரேஷ் கோபி பரிசு ஒன்றை வழங்கினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார்.


இது குறித்து பிரதமர் தனது இணையதள பக்கத்தில், புனித குருவாயூர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டேன். இந்த கோவிலின் ஆன்மீக சக்தி அளப்பரியது. அதிகாலையிலேயே குருவாயூரில் ஏராளமான மக்கள் என்னை ஆசீர்வதிக்க வந்திருந்தனர். இது, மக்களுக்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று என்னை எண்ணத் தூண்டியது. குருவாயூர் மக்களின் அரவணைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 


வருகிற 22ம் தேதி அயோத்தியில் ராமபிரான் கோவில் திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்துள்ளார் பிரதமர்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்