சென்னை: ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, முதல்வர் மு க ஸ்டாலிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் தமிழகம் வருகிறது மத்திய குழு.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் மிதந்தன.குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல பகுதிகளில் வரலாறு காணாத அதி கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் நீரில் மூழ்கின. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.
திருவண்ணாமலையில் பாறை சரிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். வெள்ளத்தைச் சந்தித்த மாவட்டங்களில் மக்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து என்ன செய்வதென்று அறியாமல் தவிப்பிற்கு உள்ளாகினர். அதே சமயத்தில் விவசாயிகளின் விளை நிலங்களும் கடும் சேதத்தை சந்தித்தது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கரையை கடந்ததால் புதுச்சேரியிலும் அதன் கோரத்தாண்டவத்தை காட்டி விட்டு சென்றது. இதனால் எங்கு பார்த்தாலும் மழை நீர் மாநிலம் முழுவதும் ஆக்கிரமித்து ஒரே வெள்ள காடாக காட்சியளித்தது. இங்கு பல்வேறு வீடுகள் சேதமடைந்தன.இதில் பொருட்சேதங்களும் ஏற்பட்டது. இன்னும் கூட புதுச்சேரியின் பல பகுதிகள் வெள்ளத்திலிருந்து மீளவில்லை.
வெள்ள சேதம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசு கணக்கெடுப்பு பணிகளை நடத்த ஆரம்பித்துள்ளன. இதற்கிடையே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ. 100 கோடி நிவாரணம் கேட்டு மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதே மாதிரி தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினும் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுக்களை அனுப்ப வேண்டும் எனவும், புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர் செய்ய 2000 கோடி நிவாரணம் கேட்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர்
நரேந்திர மோடி இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுகுறித்து முதல்வர் கூறுகையில்,
மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு மத்திய குழுக்களை அனுப்புவது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய நிபுணர் குழுக்களை தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு அனுப்பி வைத்து புயல் மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் மூன்று மத்திய குழுக்கள் வருவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
புஷ்பா 2 தியேட்டர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவனுக்கு.. வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 18, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Weather report: 6 மாவட்டங்களில் இன்று கன மழை.. 4 மாவட்டங்களில் நாளை மிக கன மழைக்கு வாய்ப்பு
மருத்துவ குப்பைகளை.. லாரியில் எடுத்துச் சென்று கேரளாவில் கொட்டுவேன்.. அண்ணாமலை ஆவேசம்
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. இடைத் தேர்தல் எப்போது நடைபெறும்?
கிண்டி மருத்துவமனை டாக்டருக்கு கத்திக்குத்து..விக்னேஷ்வரனுக்கு ஜாமின்..காவல்துறைக்கு ஹைகோர்ட் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மோடி, அமித்ஷா என்றால் பயம்.. அமைச்சர் கே.என்.நேரு
ரூ. 4.6 கோடி.. வாங்கிய பரிசுப் பணத்தில் கால்வாசியை வரியாக கட்டும் குகேஷ்.. தோனி சம்பளத்தை விட அதிகம்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட சட்ட மசோதா.. மக்களவையில் தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
{{comments.comment}}