திருச்சி: திருச்சியில் நடந்த இரு விழாக்களில் இரு மொழிகளில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திருச்சி வருகை தந்தார். முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடை இடையே தமிழையும் கலந்து அவர் பேசி அசத்தினார். இந்தப் பேச்சு மொழி பெயர்க்கப்படவில்லை.
திருச்சி விமான நிலைய விழா முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டது. கிட்டத்தட்ட பாஜக விழா போல இது காட்சி அளித்தது. காரணம், இந்த விழாவுக்கு பெருமளவில் பாஜகவினர் திரண்டு வந்திருந்தனர். திமுகவினரை விட பாஜகவினரே அதிகம் இருந்ததால் அவர்களது முழக்கம், கோஷம் தூக்கலாகவே இருந்தது.
மேலும் விழாவின் தொடக்கமாக மத்திய அமைச்சர் எல். முருகன் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்டு பாஜகவினரை நன்றாகவே முடுக்கி விட்டு விட்டார். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பாஜகவினர் அடிக்கடி கோஷமிட்டு குறுக்கீடு செய்தபடி இருந்தனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட உரையாற்றினார். அப்போது அவர் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடங்கி பின்னர் இந்திக்கு மாறி விட்டார். தொடர்ந்து தனது பேச்சு முழுவதையும் இந்தியிலேயே பேசினார். அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதால், அவரது கருத்துக்கள் தெளிவாக போய்ச் சேர்ந்தன.
தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தனக்கு சக்தி கிடைப்பதாக பிரதமர் கூறியபோது பாஜகவினர் கைதட்டி அதை வரவேற்றனர். பிரதமர் மோடி பேச்சை முடித்தபோது பாரத் மாதா கி ஜெய் என்று கூறி முடித்தார்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}