இந்துக்களைப் பிரிக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.. பிரதமர் மோடி பேச்சு

Oct 03, 2023,09:44 PM IST

ஜெகதால்பூர், சட்டிஸ்கர்:  ஜாதி வாரி கணக்கெடுப்பு என்ற பெயரில் இந்துக்களைப் பிரிக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


பீகாரில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்களையும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலம் என்ற பெருமையையும் பீகார் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஜாதி வாரிக் கணக்கெடுப்பை விமர்சித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது இந்துக்களைப் பிரிக்க நடக்கும் சதி என்றும் அவர் வர்ணித்துள்ளார். சட்டிஸ்கர் மாநிலம் ஜகதால்பூரில் நடந்த பிரமாண்ட  பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.




அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:


காங்கிரஸ் கட்சி ஒரு வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பேசி அதில் காங்கிரஸ் கட்சி மகிழ்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


நாட்டின் மூத்த கட்சியை அதன் தலைவர்கள் நிர்வகிக்கவில்லை. மாறாக தேச விரோத சக்திகளுடன் தொடர்புடைய சிலர்தான் அதை வழி நடத்துகின்றனர்.  நேற்று முதல் காங்கிரஸ் கட்சி வேறு குரலில் பேசத் தொடங்கியுள்ளது.  நாட்டின் பெரிய மக்கள் தொகைதான் மக்களின் உரிமைகளை முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் மோடியைப் பொறுத்தவரை,  ஏழைகள்தான் நாட்டின் மிக முக்கிய குடிமக்கள். அவரகளுக்குத்தான் முதல் உரிமை உண்டு. ஏழைகளின் நலன்தான் எனது குறிக்கோளும் கூட.


மக்கள் தொகை அடிப்படையில் மக்களின் உரிமைகளை அவர்கள் பிரிக்க நினைக்கிறார்கள். அப்படியானால் யாருக்கு முதல் உரிமை..  யார் அதிகம் உரிமைகளைப் பெறுவார்கள்.. காங்கிரஸ் தலைவர்கள் இதை தெளிவுபடுத்த வேண்டும்.  அப்படியானால் சிறுபான்மையினர் நிலை என்னாகும்.. முஸ்லீம்கள் என்னாவார்கள்... இந்துக்கள்தான் நாட்டின் பெரும்பான்மை மக்கள்.. அப்படியானால் அத்தனை உரிமைகளும் இந்துக்களுக்கே போய் விடுமா.. காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.


இந்துக்களைப் பிளவுபடுத்த காங்கிரஸ் முயலுகிறது, முடிவு செய்துள்ளது. இதை நான் ரொம்ப காலமாக சொல்லி வருகிறேன். காங்கிரஸ் கட்சியை நிர்வகிப்பது காங்கிரஸ்காரர்கள் அல்ல.  பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வாய் மூடி அமைதி காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  தேச விரோத சக்திகளுடன் தொடர்புடையவர்கள்தான் இப்போது கட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்துக்களைப் பிரித்து நாட்டை துண்டாடத் துடிக்கிறது காங்கிரஸ். ஏழை மக்களையும் பிளவுபடுத்தத் துடிக்கிறது காங்கிரஸ். என்னைப் பொறுத்தவரை ஏழைகள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள். அவர்கள் நலம் பெற்றால் நாடு நலம் பெறும் என்றார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்