டெல்லி : நாட்டின் பிரதமராக பதவியேற்றது முதல் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒரு நாள் கூட லீவ் எடுத்தது கிடையாது. எப்போதும் ஆன் ட்யூட்டியில் தான் இருக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் - பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரஃபுல் சர்தா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் 2023 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 9 ஆண்டு கால பதவி காலத்தில் பிரதமர் மோடி எத்தனை நாட்கள் லீவ் எடுத்துள்ளார்? உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்? அது பற்றிய புள்ளி விபரத்தை வெளியிட வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த பிரதமர் அலுவலகம் தற்போது அதற்கு பதிலளித்துள்ளது. அதில், " 2014 ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பதவியேற்றது முதல் தற்போது வரை ஒரு நாள் கூட பிரதமர் மோடி லீவ் எடுத்தது கிடையாது. எப்போதும் அவர் ஆன் ட்யூட்டியில் தான் இருப்பார். பிரதமர் மோடி இதுவரை 3000 க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் தேசிய மற்றும் சர்வதேச விழாக்களும் அடங்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு துவங்க உள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த தகவல் உலக அளவில் பிரதமர் மோடியின் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தும் என பாஜக நம்புகிறது. இதற்கிடையில் Plu நிறுவனமும், உலக அளவில் பிரதமர் மோடி புகழ்பெற்ற தலைவராக உயர்ந்துள்ளதற்கு என்ன காரணம் என்பது தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
மன்மோகன் சிங்கும்தான் லீவே எடுத்ததில்லை - காங் பதிலடி
இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக லீவே எடுத்தது கிடையாது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலை காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் விமர்சித்துள்ளது. அதில், பிரதமராக இருந்த 10 ஆண்டு காலத்தில் மன்மோகன் சிங் கூட ஒரு நாளும் லீவ் எடுத்தது கிடையாது. ஆனால் அவர் இந்த உண்மையை ஒருபோதும் பப்ளிசிட்டி பண்ணிக் கொண்டது கிடையாது. அவர் தன்னலம் பாராமல் நாட்டிற்காக சேவை ஆற்றுவதற்காக தன்மை அர்ப்பணித்துக் கொண்டார் என தெரிவித்துள்ளது.
{{comments.comment}}