வயநாடு நிலச்சரிவு.. ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.. சூரல்மலையிலும் ஆய்வு

Aug 10, 2024,03:12 PM IST

திருவனந்தபுரம் :   கனமழை மற்றும் கடும் நிலச்சரிவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து பார்வையிட்டார். சூர்மலையிலும் அவர் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.




கேரளாவின் வயநாடு பகுதியில் ஜூலை 30 ம் தேதி பெய்த கனமழையால், கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளது. தோண்ட தோண்ட தொடர்ந்து பல இடங்களில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரள மாநிலமே சோகத்தில் மூழ்கி உள்ளது. தொடர்ந்ஐ 10 நாட்களாக வயநாடு பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. 


இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை நேரில் பார்வையிட பிரதமர் மோடி இன்று வயநாடு சென்றார். முதலில் கண்ணூருகக்கு தனி விமானம் மூலம் சென்று தரையிறங்கிய பிரதமர் மோடியை, கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன்  ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். 




அதன் பின்னர் முதலில் முண்டக்கை பகுதியை ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார் பிரதமர். அவருடன் முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் கான், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோரும் உடன் பயணித்தனர். முண்டக்கை முழுவதையும் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் பிரதமர். அதேபோல சூரல்மலைக்கும் அவர் சென்று ஆய்வு நடத்தினார். புன்சிரமட்டம் பகுதியையும் அவர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். இந்த பகுதிகள்தான் நிலச்சரிவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.




வயநாட்டில் நடைபெறும் மீட்புப் பணிகள், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள், அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.


பாதிக்கப்பட்டவர்களுடன் பிரதமர் சந்திப்பு




பிரதமர் மோடி வயநாட்டில் மீட்புப் பணிகள் குறித்து மீட்புப் படையினரிடம் முதலில் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு அறுதல் கூறினார். காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டதுடன் ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் நிலச்சரிவு பேரிடர், மீட்புப் பணிள் பற்றி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.பிரதமரின் இந்த பயணத்தின் முடிவாக முக்கிய அறிவிப்புகள் வரும் என்று கேரள மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, வயநாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் வயநாடு நிலச்சரிவை நேரில் பார்வையிட செல்லும் பிரதமர் மோடிக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். அதோடு இந்த பயணத்திற்கு பிறகு அவர் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்