சின்ன கூட்டம்தான்.. ஆனால் வரலாறு படைக்கப் போகிறது.. மோடி பரபரப்பு பேச்சு

Sep 18, 2023,11:13 AM IST

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் அளவில் சிறிதாக இருந்தாலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணங்களை அது எதிர்கொள்ளப் போகிறது என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


பிரதமரின் இந்தப் பேச்சு, ஏற்கனவே இந்த சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்பாக நிலவி வரும் பல தகவல்கள் உண்மையாக இருக்குமோ என்று எண்ண வைப்பதாக உள்ளது.


நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை மத்திய அரசு கூட்டியுள்ளது. இன்று சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. பழைய நாடாமன்ற வளாகத்தில் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர் நிறைவு நாளில் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும்.


இன்று தொடங்கும் கூட்டத் தொடருக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தி நிறுவனங்களுக்கு ஒரு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:




இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அளவில் சிறியதுதான். ஆனால்  நிகழ்வுகளில் மிகப் பெரிதாக இருக்கும். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணங்களை நாம் சந்திக்கப் போகிறோம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.


நிலவில் இன்று இந்தியா காலடி எடுத்து வைத்துள்ளது. ஜி20 மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். இது நாட்டின் சாதனைகளாகும். சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியானது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.  இந்தியாவின் பன்முகத் தன்மையை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.


ஜி20 மாநாட்டின் வெற்றியானது மிகவும் அசாதாரணமானது. இந்தியாவின் எதிர்காலம் மிகப் பிரகாசமாக உள்ளது என்ற செய்தியை உலகுக்குக் காட்டியுள்ளது என்றார் பிரதமர் மோடி.


இன்று தொடங்கும் சிறப்புக் கூட்டத் தொடர்  5 நாட்கள் நடைபெறும். இக்கூட்டத்தின் அஜென்டா குறித்து முதலில் தெரிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் ஆட்சேபனைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அது வெளியிடப்பட்டது. ஆனால் அதில் குறிப்பிடப்படாத பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இடம் பெறவிருப்பதாக ஒரு பரபரப்பு நிலவுகிறது.


அதாவது இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆகியவையே அது. இதுகுறித்து மத்திய அரசு உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும் கூட இவை தொடர்பான அறிவிப்புகள் அல்லது மசோதா அதிரடியாக சமர்ப்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பிரதமர் வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியிருப்பதால் பரபரப்பு இன்னும் கூடியுள்ளது.


இதற்கிடையே,  நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பது என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்