"இந்தியன் முஜாஹிதீன்.. உருப்படாத கூட்டணி".. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

Jul 25, 2023,01:04 PM IST

டெல்லி: இது உருப்படாத கூட்டணி. தோற்றுப் போன, சோர்வடைந்து போன, நம்பிக்கை இழந்து விட்ட, என்னை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணிதான் எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


"இ.ந்.தி.யா." என்ற பெயரில் புதிய கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலவராக சோனியா காந்தியை அறிவித்து செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி குறித்து தேசிய அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.


இந்த நிலையில் இந்தக் கூட்டணி உருவானது முதலே பாஜகவினர் கடுமையாக விமர்சித்தும் கேலி கிண்டல் செய்தும் வருகின்றனர். இதுவே எங்களுக்கு வெற்றி என்று எதிர்க்கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் இவ்வாறு சாடியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டணியை, இலக்கில்லாத ஒன்று, இந்தியன் முஜாஹிதீன் என்று வர்ணித்துள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு போன்றதுதான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என்றும் பிரதமர் விளாசினார்.


இப்படி ஒரு இலக்கற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தை நான் ஒரு போதும் பார்த்ததில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார் . பிரதமர் மேலும் கூறுகையில், இந்தியா என்ற பெயரை வைத்துக் கொண்டதற்காக அவர்களே அவர்களைப் பாராட்டிக் கொள்கின்றனர். இந்திய தேசிய காங்கிரஸ், ஈஸ்ட் இந்தியா கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.. இதிலும் கூடத்தான் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. இந்தியா என்ற பெயரை வைத்து விட்டால் போதுமா.. ! இந்தியா என்ற பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. 


இந்த கூட்டணி தோல்வி அடைந்தவர்களால், சோர்ந்து போனவர்களால், நம்பிக்கை இழந்தவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணி. மோடியை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களது ஒரே குறிக்கோள். அவர்கள் கடைசி வரை எதிர்க்கட்சிகளாகவே இருக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. பாஜக 2024 லோக்சபா தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார் பிரதமர் மோடி.


எதிர்க்கட்சிகளின் கூட்டணியை இந்தியன் முஜாஹிதீன் என்று பிரதமர் வர்ணித்திருப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளது எதிர்க்கட்சிகளிடையே புதிய சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்