கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிய தியானம், இன்று 2வது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் தொடர்ந்து கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
சூரியனை வணங்கிய பின்னர் 2வது நாள் தியானம்
இந்நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று தியானத்தை தொடங்கி, இன்றும் தியானம் செய்து வருகிறார். இன்று காலை சூரிய உதயத்தை பார்த்த நமஸ்காரம் செய்த பின்னர் தியான மண்டபத்திற்குள் சென்றார். அங்கு விவகானந்தர் சிலை முன்னர் அமர்ந்து காவி உடை மற்றும் கையில் ருத்திராட்சை மாலையுடன் தியானம் மேற்கொண்டு வருகிறார்.
நாளை மாலை வரை, அதாவது கிட்டத்தட்ட 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சுற்றுலா பயணிகள் யாரும் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட வில்லை. இன்று சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னர் விவேகானந்தர் பாறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சோதனைக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி:
பிரதமர் இருக்கும் பகுதிக்கு யாருக்கும் அனுமதியில்லை. மற்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தியானம் முடிந்து நாளை மாலை 3 மணியளவில் அவர் வெளியே வருகிறார். அதன் பின்னர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் தங்கலை முன்னிட்டு குமரி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரை, ரவுண்டானா சந்திப்பு, மகாதானபுரம் சந்திப்பு மற்றும் குமரி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் 4000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விவகானந்தர் பாறையை சுற்றி கடற்படை கப்பலில் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}