பிளஸ்டூவில் அசத்திய மாணவிகள்.. வழக்கம் போல மாணவர்களை மிஞ்சினர்.. 96.44% தேர்ச்சி!

May 06, 2024,06:23 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு  ரிசல்ட் இன்று  வெளியானது. கடந்த ஆண்டு 94.3% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.


பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற்றது. இந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில் 3,58,201 மாணவர்கள் மற்றும்  4, 13,998 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவு இன்று வெளியானது.


+2 பொதுத்தேர்வில் தேர்வு  எழுதியோரில் மொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.37% மாணவர்களும், 96.44% சதவீத மாணவியரும் வெற்றி பெற்றுள்ளனர். 




பிளஸ் டூ தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மற்றும் சிவகங்கை மாவட்டம் தலா 97.42 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. அரியலூர் மாவட்டம் 97.25 சதவீத தேர்ச்சியுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில், கோயம்பத்தூர் 96.97% தேர்ச்சி பெற்றுள்ளது.


தமிழ் பாடத்தில் 35 பேர் நூற்றுக்கு நூறு


தமிழ் பாடத்தில் 35 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஏழு பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 6,996 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6142 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பொருளியலில் 3,299 பேரும், கணிதத்தில் 2,587 பேரும், உயிரியலில் 652 பேரும், வேதியலில் 471 பேரும், தாவரவியலில் 90 பேரும், விலங்கியலில் 382 பேரும், கணக்குப்பதிவியலில் 1647 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2251 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடத்தில் 210 பேரும், இயற்பியலில் 633 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.


தமிழ்நாடு முழுவதும் 397 அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 95.49 சதவீதமும், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70% சதவிகிதமும் இருபாலர் பள்ளிகளில்  94.70 சதவீதமும் பாஸாகியுள்ளனர்.  மகளிர் பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதம் 96.39%. ஆகும்.


புதுச்சேரியில் 92.41% வெற்றி


புதுச்சேரியில் 92.41% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ்டூ தேர்வு எழுதிய 14,012 மாணவர்களில் 12,948 பேர் தேர்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில் 93.38% பேரும்,  காரைக்காலில் 87.03 சதவீதம் பேர் பாஸ் ஆகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்