சென்னை: பிளஸ்டூ தேர்ச்சி விகிதம், கொரோனா காலத்துக்குப் பிறகு கடந்த மூன்று தொடர்ந்து உயர்ந்து வருவது ஆசிரியர்களை, மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்த வருடம் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி விகிதம் 94.56 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் வளைக்கத் தொடங்கியது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. லாக்டவுன் வந்தது. அப்போது மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். இதனால் அவர்களின் படிப்பு மந்தமாகவே காணப்பட்டு வந்தது. அப்போது நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் பாடங்கள் குறைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அதிலும் மாணவர்கள் சரியாக தேர்வு எழுதாமல் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருந்தது.
2021ம் ஆண்டு தேர்வு நடத்தவில்லை. மாறாக ஆல் பாஸ் செய்யப்பட்டனர். இதையடுத்து கொரோனா ஒழிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் வழக்கம் போல பள்ளிகளும் இயல்பு நிலைக்குத் திரும்பின. தேர்ச்சி விகிதமும் திருப்திகரமாக மாறத் தொடங்கியது. கடந்த இரண்டு வருடங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் தேர்வு விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2023 ஆம் ஆண்டு 94.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அதைவிட கூடுதலாக இந்த வருடம் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற்றது. இதில் 3,58, 201 பேர் மாணவர்களும், 4,19,998 மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் பிளஸ் டூ தேர்வு எழுதினார். இதற்கான தேர்வு முடிவு இன்று வெளியானது.
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.37% பேரும், மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 3 வருடங்களாக வருடா வருடம் தேர்ச்ச விகிதம் உயர்ந்து கொண்டே செல்வது ஆசிரியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் 100 சதவீத தேர்ச்சி என்ற அபார சாதனையை நிச்சயம் நம்மால் அடைய முடியும் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து
இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}