சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம்.. பயணிகள் மகிழ்ச்சி..!

Mar 11, 2025,05:16 PM IST

சென்னை: சென்னையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி இடையே இரு மார்க்கமாக கூடுதல் விமான சேவைகள் இயக்கப்பட இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான சேவைகளை வழங்கும் நகரமாக தூத்துக்குடி திகழ்கிறது. அதாவது தூத்துக்குடி  மிகப்பெரிய தொழிற்சாலைகள், துறைமுகம், என இருப்பதால் இங்கு பஸ், ரயில், கப்பல், விமானம் என நான்கு போக்குவரத்து வசதிகளும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் தென் மாவட்டங்களுக்கு மையமாக இருக்கும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலும் வெளிநாடு மற்றும் வெளி மாநில மக்களின் வசதிக்காக அடுத்தடுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.




குறிப்பாக சென்னை விமான நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு  மக்கள் விமானத்தில் அதிகளவு பயணம் செய்து வருகின்றனர்.  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட தென் மாவட்ட மக்களும் தூத்துக்குடி விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தென் மாவட்டங்களில் கூடுதல் ரயில் சேவைகள் இல்லாத காரணத்தால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் விமான சேவையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்த நிலையில், மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது பயணிகளின் தேவைக்கேற்ப   சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தூத்துக்குடிக்கு இரு மார்க்கமாக  கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 


அதன்படி, சென்னை டூ தூத்துக்குடி இடையே தற்போது 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 30 முதல் கூடுதலாக 12 விமானங்களாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் சென்னை டூ திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்களில் இருந்து, தற்போது மார்ச் 22 ஆம் தேதி முதல் 16 விமானங்களாக உயர்த்தப்பட்டு விமான சேவை இயக்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் விட்டு விட்டு வச்சு செய்யும் கனமழை .. 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

news

நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக மத்திய அரசை கண்டித்து.. தமிழக எம்பிக்கள் கண்டனம் முழக்க போராட்டம்!

news

தமிழ்நாட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த மழை.. இன்றும், நாளையும் பரவலாக மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

ஐ.பி.எல் விளம்பரம் பாமகவிற்கு கிடைத்த வெற்றி.. பாமக தலைவர் அன்புமணி பெருமிதம்..!

news

Power of Biryani.. டி.எம்.எஸ்-ஸோட வெண்கலக் குரலின் ஈர்ப்புக்கு காரணம் என்ன தெரியுமா??

news

மதுபான ஊழல்.. காலையிலேயே அண்ணாமலை போட்ட X குண்டு.. என்ன சொல்ல வருகிறார்?

news

மொரீசியஸில் பிரதமர் நரேந்திர மோடி.. ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

news

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.. கவலைப்படாதீங்க...இயற்கை முறையில் ஈஸியா விரட்டலாம்!

news

முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரி தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்