கம்பீரத்தின் அடையாளம்.. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரியாவிடை..!

Sep 19, 2023,11:54 AM IST

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எம்பிக்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.


கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு விடை கொடுக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தை மத்திய அரசு பெரும் பொருட் செலவில் கட்டியுள்ளது. அந்தக் கட்டடத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இடம் பெயரவுள்ளன. நேற்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது நாளை முதல் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பு அமர்ந்து அனைத்து எம்.பிக்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக அனைத்து எம்பிக்களும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தனித்தனியாகவும் , குழுவாகவும் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்ய சபா ஜெகதீப் தங்கர், ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே, டி ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 




பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் முன்பு சுமார் 750 எம்பிக்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தனர் .அப்போது பாஜா எம்பி நர்கஹாரி அமீன் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு சிறு பரபரப்பு நிலவியது. பின்னர் அவருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்ட பிறகு போட்டோ எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.


கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் பல சட்டம் நடைமுறைகளை உருவாக்கியதுடன் மட்டுமல்லாமல் காரசாரமான விவாதங்களையும் கண்டிருக்கிறது. இந்திய அரசியலின் பல முக்கிய தலைவர்களின் கம்பீரக் குரல்களும் ,அவர்களின் விவாதங்களும் அரங்கேறி இருந்தது.  சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் வட்ட வடிவிலானது. 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 


இந்த கட்டிடம் 1921 ஆம் ஆண்டு முதன் முதலில் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில்  நாடாளுமன்ற முதல் கூட்டம் 1927 ஜனவரி 19-ல் நடைபெற்றது. கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த நாடாளுமன்ற பழைய கட்டிடத்திற்கு விடை கொடுத்துபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளிலும் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்