பிதாமகன் தயாரிப்பாளர் வி. ஏ. துரை மரணம்

Oct 03, 2023,07:53 AM IST

சென்னை: பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவரான தயாரிப்பாளர் வி.ஏ. துரை மரணமடைந்தார்.


கஜேந்திரா, லவ்லி, லூட்டி, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் வி.ஏ. துரை. ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தையும் இவர்தான் தயாரித்தார்.  படத் தயாரிப்புத் தொழில் நலிவடைந்து போனதால், துரையும் நொடித்துப் போயிருந்தார். சிரமமான நிலையில் இருந்து வந்த அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது. 




சர்க்கரை நோய் அதிகமாகி ஒரு காலை எடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்த அவர் நேற்று இரவு தனது வீட்டிலேயே மரணமடைந்தார். அவருக்கு வயது 69. காலமான வி.ஏ. துரைக்கு,விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவியர் உண்டு. 


முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என இரு மகள்களும், 2வது மனைவிக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் சென்னை வளசரவாக்கம் கடம்பாடி அம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்


வி.ஏ. துரை மறைவுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினரும், பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு போன்ற மாபெரும் வெற்றிப்பட தயாரிப்பாளருமான வி. ஏ. துரை அவர்கள் சற்று முன்பு காலமாகிவிட்டார் என்பதை  வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 


அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கியது

news

ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்

news

சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்.. இடைவிடாமல் பலத்த மழை பெய்யக் கூடும்.. IMD

news

புயல் முழுமையாக நீங்க டிசம்பர் 5 வரை ஆகும்.. அதுவரை மழை இருக்கும்.. வானிலை ஆர்வலர் செல்வகுமார்

news

ஃபெஞ்சல் புயலால் கன மழை எதிரொலி.. வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால்.. இந்த நம்பரில் கூப்பிடுங்க!

news

Lunch box recipe: வாழைப்பூ அரைத்து விட்ட குழம்பு .. செம டேஸ்ட்டி.. சுப்ரீம் ஹெல்த்தி!

news

ஃபெஞ்சல் புயல் + கன மழை எதிரொலி.. சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்.. தாம்பரத்திலும் பாதிப்பு!

news

அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

சென்னையில் மிக கன மழை.. பறக்கும் ரயில் சேவை முற்றிலும் ரத்து.. புறநகர் மின் ரயில் சேவையும் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்