ஜகார்தா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கிராமத்தில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த சூப்பரான ஆபர் கொடுத்திருக்காங்களாம். மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாம் இந்தத் திட்டம். அப்படி என்ன திட்டமாக இருக்கும்னு ஆச்சரியமா இருக்கா.. மேலே படிங்க பாஸ்!
பிலிப்பைன்ஸ் தலைநகர் பகுதியில் உள்ள மண்டலுயோங் நகரத்தின் அடிஷன் ஹில்ஸ் அதாவது Addition Hills அப்படிங்கிற கிராமத்துல, டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஒரு வித்தியாசமான முயற்சியை தொடங்கியுள்ளனர். அதாவது டெங்கு கொசுக்களை பிடித்து ஒப்படைக்கும் மக்களுக்கு பணப் பரிசு வழங்கப்படும் என்பதுதான் அந்த் திட்டம்
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இந்த ஊரில் வசித்து வருகின்றனர். இங்கு கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. டெங்கு பரவலும் அதிகமாக உள்ளது. இதையடுத்து தூய்மை பணிகள், கால்வாய் சுத்தம் செய்யுதல், மற்றும் சுகாதார பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், உயிரிழப்புகள் அதிகரித்ததால் கடுமையான நடவடிக்கைகள் அவசியமாகின.
பிலிப்பைன்ஸ் முழுவதும் பிப்ரவரி 1, 2025 நிலவரப்படி 28,234 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 40% அதிகமாகும். கேசோன் நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. 1,769 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கொசு பிடிக்கும் திட்டம் – எப்படி செயல்படுகிறது?
இந்த நிலையில்தான், அடிஷன் ஹில்ஸ் கிராமத் தலைவர் கார்லிடோ செர்னால் இந்த கொசு பிடிக்கும் திட்டத்தை அறிவித்தார். இதன்படி, ஐந்து கொசுக்களுக்கு (உயிருடனோ அல்லது பிணமாகவோ) பிடித்துக் கொடுத்தால், அந்த ஊர் மதிப்புப்படி 1 பிசோ (ஒரு சென்ட்) பரிசாக வழங்கப்படுகிறது. கிராம மக்கள் தங்களது வீடுகள், வீதிகள், கால்வாய்கள் போன்ற இடங்களில் கொசுக்களை பிடித்து ஊராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
இந்த முயற்சி சிலரால் பாராட்டப்பட்டாலும், திட்டம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. அதாவது, சில குசும்பர்கள், பணம் சம்பாதிக்கும் ஈஸியான வழியாக இதைக் கருதி, கொசுக்களை வளர்த்துப் பிடித்துக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்பதால், இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், கிராம தலைவர் டெங்கு தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்ததும் திட்டம் நிறைவடையும் என உறுதி அளித்துள்ளார்.
திட்டம் செயல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மக்கள் இதில் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கினர். 64 வயதுடைய குப்பை சேகரிப்பாளர் மிக்வேல் லாபாக் என்பவர், 45 கொசு லார்வாக்களை ஒப்படைத்து 9 பிசோ (15 சென்ட்) சம்பாதித்தாராம். இந்தக் காசை வைத்து ஒரு காபி வாங்க முடியும் என்பதால் இது எனக்கு உதவியாக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தவளைகளுக்கும் வருகிறது புது ஆபர்
கேசோன் நகரில் இன்னொரு திட்டத்தையும் பரிசீலித்து வருகின்றனராம். அதாவது கொசுக்களை தவளைகள் சாப்பிடும் என்பதால் அதிக அளவில் தவளைகளை வளர்க்கும் திட்டம் உள்ளதாம். இது பரிசீலனைக்குப் பிறகு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
மண்டலுயோங் நகரத்தின் கொசு பிடிக்கும் திட்டம் துணிச்சலான முயற்சியாக இருந்தாலும், அதன் நீடித்த விளைவுகள் சரியானதா?, அல்லது புதிய சிக்கல்களை உருவாக்குமா? என்பதில் கேள்விக்குறி உள்ளது.
இதேமாதிரி நம்ம ஊரிலும் ஒரு திட்டம் போடலாமே.. இங்கெல்லாம் லட்சக்கணக்கில் கொசுக்கள் குவிந்து கிடக்கின்றன. பிடித்துக் கொடுத்தால் ஒரு காபி அல்ல.. ஒரு நாள் சாப்பாட்டுக்கே ஈஸியா சம்பாதிக்கலாம்.. அம்புட்டு கொசு கெடக்கு நம்ம ஊர்ல!
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
உலக தாய் மொழி தினம்.. தமிழுக்கு எதிராக நிகழ்ந்து விட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின?
PMSHRI திட்டத்தில் இணைந்தால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை
ஏழை பிள்ளைகளை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டமே புதிய கல்விக் கொள்கை திட்டம்.. சபாநாயகர் அப்பாவு
ஒரு நாட்டைக் கைப்பற்ற.. அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி.. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர்
Welcome To Tamil Nadu: நேற்று அந்த ஹேஷ்டேக்.. இன்று இந்த ஹேஷ்டேக்.. நடுவுல புகுந்த தவெக.. அடடே!
கூல் தோனி.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து போட்ட சூப்பர் போஸ்ட்.. உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்!
உலக தாய்மொழி தினம் 2025.. தாயின் சிறந்த கோயிலும் இல்லை.. தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை!
மனைவியைப் பிரிந்தார் யுஸ்வேந்திர சாஹல்.. 4 வருடத்தில் கசந்து போன வாழ்க்கை.. ரசிகர்கள் ஷாக்!
{{comments.comment}}