ஆபாசப் பட உலகின் ராணியாக வலம் வந்த.. தைனா பீல்ட்ஸ் திடீர் மரணம்.. வயசு  24 தான்!

Jan 12, 2024,06:03 PM IST

லிமா:  பெரு நாட்டின் ஆபாசப் பட உலகின் ராணி போல வலம் வந்தவரான தைனா பீல்ட்ஸ் திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு 24 வயதுதான் ஆகிறது. ஆபாசப் பட உலகினர் குறித்த பரபரப்பான தகவல்களை வெளியிட்ட சில மாதங்களிலேயே அவரது மரணம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தைனா பீல்ட்ஸ், பெரு நாட்டின் மிகப் பிரபலமான ஆபாசப் பட நடிகை. இவரது படங்களுக்கு அங்கு பெரிய கிராக்கியே உள்ளது.  இவரது படங்கள் என்றாலே அது மிகப் பெரிய அளவில் விரும்பிப் பார்க்கப்படும். அந்த அளவுக்கு பிரபலமாக வலம் வந்தவர் பீல்ட்ஸ்.


இந்த நிலையில்தான் அவர் தனது வீட்டில் பிணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் ஆபாசப் பட உலகைச் சேர்ந்த நடிகைகளை எந்த அளவுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மோசம் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.




இதனால் பெரு ஆபாசப் படஉ லகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் அவரது மறைவுச் செய்து வந்துள்ளது. 


இதுகுறித்து பீல்ட்ஸுக்கு நெருக்கமானவரான அலெஜான்ட்ரா ஸ்வீட் கூறுகையில், தைனாவை அனைவரும் நினைவுகூறுவோம். மிகவும் நல்ல பெண் அவர். தூய்மையான உள்ளத்துக்குச் சொந்தக்காரர். எங்கிருந்தாலும் அவர் ஒரு தேவதையாக வலம் வருவார் என்று கூறியுள்ளார்.


முன்னதாக தைனா கொடுத்திருந்த பரபரப்பான பேட்டியில், தான் ஆபாசப் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் சந்தித்த பல்வேறு கொடுமைகளை விளக்கியிருந்தார். தன்னை பாலியல் ரீதியாக பலரும் தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.


முதலில் அதிலிருந்து தான் விலக முடியாமல் தத்தளித்ததாகவும், பின்னரே தான் சுதாரித்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார் தைனா பீல்ட்ஸ்.

சமீபத்திய செய்திகள்

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்