பாலு மகேந்திராவின்.. சிஷ்யர் கைவண்ணத்தில் "பேரன்பும், பெருங்கோபமும்".. அசத்தும் பர்ஸ்ட் லுக்!

Feb 19, 2024,03:53 PM IST

சென்னை: பேரன்பும், பெருங்கோபமும் படத்தில் கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதையை சுவாரசியமாக திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக அறிமுக இயக்குனர் சிவப்பிரகாஷ் கூறியுள்ளார். 


இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள பேரன்பும், பெருங்கோபமும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.




பேரன்பும் பெரும் கோபமும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சிவப்பிரகாஷ் அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில்  மாணவராக இருந்தவர். ஜே பி தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரியோட்டா மீடியா பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.


பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான தங்கர் பச்சானின் மகன்  விஜித் பச்சான் நாயகனாகவும், நாயகியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள்தாஸ், லோகு ,சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நல்ல சிந்தனைகளை கொண்ட சாமானியனின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இவ்வுலகில் வாழும் அசலான காதலர்களை போலவே நாயகனும், நாயகியும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரதிபலிக்கின்றனர். இதனால் இளைய தலைமுறையினர் இடையே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.


இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

சமூகத்தால் இயக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடன் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என இயக்குனர் சிவப்பிரகாஷ் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்