சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அரசு பஸ்களை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வது தொடர்பான புகைப்படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது.. அதில் ஒரு புகைப்படம் மனதைக் குடைவதாக இருந்தது.
அரசு சார்பில் நடத்தப்படும் பஸ் போக்குவரத்தும், மெட்ரோ ரயில் உள்ளிட்டவையும் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுக்கின்றன. அரசு பஸ்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான சேவை உள்ளது. அதிக அளவிலான பஸ்களை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான அரசு பஸ் சேவையும் உள்ளது என்பது முக்கியமானது.
மக்களின் வசதிக்காக விதம் விதமான பஸ் சேவையை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்காக கட்டணமில்லா பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தாழ்தளப் பேருந்துகள், ஏசி பேருந்துகள், ஸ்மால் பஸ்கள் என போக்குவரத்துக் கழகத்தின் சேவை மிகப் பெரிதாகும்.
முக்கிய விடுமுறைக் காலங்கள், விழாக் காலங்களில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளையும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்குகின்றன. இதனால் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் சுலபமாக செல்ல முடிகிறது. மேலும் தலைநகர் சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் அத்தனை முக்கிய நகரங்களுக்கும் இப்போது பேருந்து வசதி சிறப்பாக உள்ளதால் மக்களின் பிரயாணங்கள் மிகவும் இலகுவாகியுள்ளன.
இந்த நிலையில் ஒரு புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் பக்க ஹேன்டிலில் இப்படி ஒரு செய்தி இருந்தது.. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்க உறுதிபூண்டுள்ளது. இன்று, விழுப்புரம் கோட்டத்தின் இயக்கத்திற்குட்பட்ட முக்கிய பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு, பெங்களூரு, திருப்பதி, திருச்சி, சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பேருந்து நிலையங்களில் ஒவ்வொரு நடை முடிவிலும் பேருந்துகளின் உட்புறம் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு படத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் ஏகப்பட்ட பாட்டில்கள், குப்பைகளை அள்ளுவது போன்ற காட்சி இருந்தது. அதைப் பார்த்தபோது மனதுக்குள் சின்னதாக வருத்தம் வருவதை தவிர்க்க முடியவில்லை. பயன்படுத்திய பொருட்களை அப்படி அப்படியே போட்டுச் செல்வதை மக்கள் தயவு செய்து தவிர்க்க வேண்டும். காரணம், இப்படிப்பட்ட குப்பைகளை கைகளால் எடுத்து சுத்தம் செய்பவரும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே. அதை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
மேலும் பயன்படுத்தும் பொருட்களை, அதாவது குப்பைகளை தனியாக ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டு பஸ் நின்றதும், பிளாட்பார்மில் இருக்கும் குப்பைப் பெட்டியில் போடுவதை பழக்கமாக்கிக் கொள்ள நாம் முயல வேண்டும். எப்படியும் பஸ் பயணத்தின்போது தண்ணீர் குடிப்போம், ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம்.. அவற்றை கண்டிப்பாக நாம் ஏதாவது ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டால் இறங்கும்போது அதை உரிய இடத்தில் போடுவது சுகாதாரமாகவும் இருக்கும், யாருக்கும் எந்த அசவுகரியத்தையும் தராது, பஸ்களையும் சுத்தமாக வைத்துக் கொண்டது போலவும் இருக்கும்.
அரசு பஸ்கள் குப்பையாக இருக்கின்றன என்று பலர் புலம்புகிறார்கள். அதை குப்பையாக்குவதும் நாம்தான் என்பதை தாழ்மையுடன் அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நாம்தான் நமது பஸ்களை சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவை அரசின் சொத்து மட்டும் அல்ல, நமது சொத்தும் கூட. வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்க முயல்வோமோ அதேபோலத்தான் அரசு பஸ்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். அது எல்லோருக்கும் நல்லதுதானே!
குப்பைகளை முடிந்தவரை தவிர்ப்போம்.. அப்படியே குப்பை சேரும்பட்சத்தில் அதை பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதையும் நாம் உறுதி செய்வோம்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}