அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள்.. டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் பதாகை!

Jan 15, 2025,10:26 AM IST

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பார்வையாளர்கள் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிரான பதாகை வைக்கப்பட்டிருந்துத பலரையும் கவர்ந்தது.


மதுரை மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களை கட்டியுள்ளன. முதலில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தேறியது. முதல் பரிசை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 19 காளைகளைப் பிடித்து தட்டிச் சென்றார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 1000 காளைகள், 900 காளையர்கள் என போட்டி அதிரடியாக போய்க் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் போட்டியை திரண்டு வந்து பார்த்து ரசிக்கிறார்கள். ஏகப்பட்ட வெளிநாட்டுக்காரர்களும் போட்டியை கண்டு வியந்து கொண்டுள்ளனர்.




இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்வையிடும் மக்கள் வரிசையில் அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள், டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்ற பதாகையும் இடம் பெற்றுள்ளது. மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பல ஆயிரம் பொதுமக்கள் திரண்டு மதுரை நோக்கி ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தி அதிர வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.


இந்தத் திட்டம் வராது என்று தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. நான் இருக்கும் வரை இத்திட்டம் வராது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்தத் திட்டம் வராது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் திட்டம் முழுமையாக இதுவரை கைவிடப்படவில்லை என்பதால்  மக்களின் போராட்டமும் தொடர்கிறது. அதன் எதிரொலியாகவே இந்த பாலமேடு பதாகை என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Exclusive: புதுமையான பட்டாசு.. படபடன்னு வெடிக்கும்.. வெடிச்சதும் விஜய் உருவம் வரும்.. சபாஷ் சபாபதி!

news

ஜனவரி 18, 19.. மிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்!

news

லெப்ட்ல குட் பேட் அக்லி.. ரைட்ல ரெட்ரோ.. நெட்பிளிக்ஸ்காரன் சம்பவம் பண்ணிட்டான் மாப்ளை!

news

திருவள்ளுவர் தினம்.. 9 பேருக்கு விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்!

news

அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள்.. டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் பதாகை!

news

நீதி கேட்டு போராடிய பெண்களை.. நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா?.. அன்புமணி ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 15, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Makara Jyothi 2025: சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலையில் மகரஜோதி .. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

news

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக்.. கார் பரிசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்