டெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் 2024ல் 'கல்வியறிவு இல்லை' எனக் குறிப்பிட்டிருந்த 121 வேட்பாளர்களும் தோல்வியை தழுவியுள்ளதாக Association of Democratic Reforms அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு கல்வி அறிவு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நெடுநாட்களாக இருந்து வருகிறது. குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்ற குரலும் நீண்ட நாளாக ஒலித்து வருகிறது. பெரும்பாலான மக்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு கல்வி அறிவு அவசியம் என்று தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஒரு சிலர் காமராஜர் போல் உள்ளவர்கள் பிறவி மேதைகள்.. கல்வித் தகுதியை நிர்ணயித்தால் அவரைப் போன்றவர்களை இழக்க நேரிடும் என்று வாதிடுகிறார்கள். இவர்கள் மக்கள் பிரதிநிதிகள் இருப்பதால், கல்வி அறிவு தேவையில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களுக்கு கல்வி அறிவு என்பது மிக முக்கியமானது என்று பெரும்பாலான மக்கள் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். கல்வியறிவு இல்லாத மக்களின் பிரதிநிதிகள் மக்களின் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித்தகுதி குறித்த விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்ட 8,360 வேட்பாளர்களில் 8337 பேரின் கல்வித்தகுதியை தேர்தல் உரிமை அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அதன் படி முதல் கட்ட தேர்தலில், 836 வேட்பாளர்கள் பட்டதாரி நிலையுடனும், 639 வேட்பாளர்கள் 5 முதல் 12ம் வகுப்பு வரையிலான தகுதியும், 36 வேட்பாளர்கள் வெறும் எழுத்தறிவு பெற்றவர்களாகவும், 26 பேர் படிப்பறிவற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 4 பேர் தங்களின் கல்வி தகுதியை வெளியிடவில்லை.
மேலும், 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டோரில் 121 வேட்பாளர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என்றும், 359 பேர் தாங்கள் 5ம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், 647 வேட்பாளர்கள் 8ம் வகுப்பு வரை கல்வித்தகுதி பெற்றவர்கள் என்றும், 1,303 பேர் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாதவர்கள் என்றும், 1502 பேர் பட்டம் பெற்றவர்களாகவும், 198 வேட்பாளர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்று தெரிவித்திருந்தனர்.
இதில், கல்வியறிவு இல்லை எனக் குறிப்பிட்டிருந்த 121 வேட்பாளர்களும் தோல்வியை தழுவியுள்ளதாக Association of Democratic Reforms தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் படிக்காத அந்த வேட்பாளர்களை வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கோடீஸ்வர்ரகள்:
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நடப்புத் தேர்தலில் அதிக அளவிலான கோடீஸ்வர எம்.பிக்கள் தேர்வாகியுள்ளனர். அதாவது வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 தேர்தலில் இந்த எண்ணிக்கை 88 சதவீதமாக இருந்தது நினைவிருக்கலாம். இந்த முறை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
2009 தேர்தலில் கோடீஸ்வர எம்.பிக்களின் எண்ணிக்கை வெறும் 58 சதவீதமாகவே இருந்தது நினைவிருக்கலாம். 2014 முதல் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது கோடீஸ்வரர்களையே பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களாக தேர்வு செய்வதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய தேர்தலில் மொத்தம் உள்ள 543 புதிய எம்.பிக்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள்.
கோடீஸ்வரக் கட்சி பாஜக
இதில் பாஜகவில்தான் அதிக அளவிலான கோடீஸ்வர வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதாவது அவர்களது 240 புதிய எம்.பிக்களில் 227 பேர் அதாவது 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். 99 காங்கிரஸ் எம்பிக்Kளில் 92 பேர் கோடீஸ்வரர்கள். திமுகவின் 22 எம்பிக்களில் 21 பேர் கோடீஸ்வரர்கள். திரினமூல் காங்கிரஸ் கட்சியின் 29 பேரில் 27 பேர் கோடீஸ்வரர்கள். ஆம் ஆத்மி கட்சியின் 3 வெற்றி பெற்ற வேட்பாளர்களுமே கோடீஸ்வரர்கள்தான்.
அதேபோல இப்போது கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்.பிக்கள், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்.பிக்களுமே கோடீஸ்வரர்கள்தான்.
சாமானியர்கள் எல்லாம் எம்.பிக்கள் ஆவது இனி கானல் நீர்தானோ!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}