சென்னை புத்தகக் கண்காட்சியில்.. அட போட வைத்த பேனாக்கள் பேரவை.. அசரடித்த வாசிப்போம், நேசிப்போம்!

Jan 10, 2025,10:59 AM IST

சென்னை : சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் பேனாக்கள் பேரவை சார்பில் புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை அனைவரிடமும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வாசிப்போம்...நேசிப்போம் என்ற தலைப்பில் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த வித்தியாசமான வாசிப்போம் நேசிப்போம் நிகழ்வு.


வெளிநாடுகளில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வித்தியாசமான நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படும். குறிப்பாக நியூயார்க்கில் உள்ள பிரபல டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மொத்தமாக அமர்ந்து புத்தகம் படிக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதைப் பார்க்கும் மக்களுக்கு நாமும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும், இதனால் புத்தக வாசிப்பாளர்கள் எண்ணிக்கை பெருகும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.




இதேபோல இந்தியாவிலும் கூட ஆங்காங்கு இதுபோல மொத்தமாக கூடி புத்தகம் வாசிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மும்பையில் இதுபோன்ற நிகழ்வு அடிக்கடி நடைபெறுவது வழக்கம். அதேபோல சென்னை சிட்லபாக்கம் ஏரி பகுதியில் உள்ள பூங்காவிலும் இதுபோன்ற புக் ரீடிங் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 


இதேபோன்ற ஒரு நிகழ்வை சென்னை புத்தகக் கண்காட்சியிலும் நடத்தி வாசகர்களையும், புத்தக ஆர்வலர்களையும் மேலும் மேலும் படிக்க தூண்டும் செயலை செய்யலாமே என்று எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் நிரம்பிய பேனாக்கள் பேரவை அமைப்பு திட்டமிட்டது. இதுகுறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் கூறுகையில், நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பலரையும் ஒன்றிணைத்து இது போன்ற ஒரு வாசிப்பு நிகழ்ச்சியை அடிக்கடி நடத்துவார்கள். அதை முன் மாதிரியாக கொண்டு இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை நம்முடைய ஊரிலும் நடத்தலாமே என தோன்றிய யோசனையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.




சென்னையில் டிசம்பர் 27ம் தேதி துவங்கி, 48 வது புத்தகக் கண்காட்சி ஒய்.எம்.சி.ஏ.,மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை பேனாக்கள் பேரவை சார்பில், வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் இன்றைய சூழலில் இன்றைய இளைய சமூகத்தினரிடம் பு்தகங்களை அதிகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக வாசிப்போம்...நேசிப்போம் என்ற தலைப்பில் புத்தகங்கள் வாசிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


சென்னை புத்தகக் கண்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, காந்திசிலை முன்பாக எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸின் ஒருங்கிணைப்பில் இந்த வாசிப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எழுத்தாளர்களையும், வாசகர்களையும் ஒன்றிணைத்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பலரிடமும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.




இந்த நிகழ்ச்சியில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் வெங்கட சுப்பிரமணியம், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன், என்.சி.மோகன்தாஸ், டாக்டர்.ஜெ.பாஸ்கர், மடிப்பாக்கம் வெங்கட், ஓவியர் ஷாம், கிரிஜா ராகவன், ஓம்சக்தி கண்ணன், நூருல்லா, என்.ஆர்.சம்பத், டி.என். ராதாகிருஷ்ணன், ராம் ஸ்ரீதர், பொற்கொடி, கேஜி ஜவஹர், ரவி நவீனன் உள்ளிட்ட பலரும், பேனாக்கள் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆளுக்கு ஒரு புத்தகத்தை கையில் ஏந்தியபடி படித்தனர். இதைப் பார்த்து பலரும் வியந்து பாராட்டிச் சென்றனர்.


பேனாக்கள் பேரவை முன்னெடுத்துள்ள இந்த நிகழ்வானது மேலும் விரிவான முறையில் வரும் காலத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பெருத்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் புத்தக வாசிப்பு என்பது சுருங்கிப் போய் விட்டது. இ புக்குகள் பெருக்கத்தாலும், ஆடியோ கதைகளின் பெருக்கத்தாலும் புத்தகம் வாங்கி வாசிப்போர் குறைந்து வருவதாக ஒரு கருத்து உள்ளது. ஆனால் அப்படி இல்லை, புத்தக வாசிப்பிலும் தனி சுகம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் சொல்லாமல் சொல்கிறது.. அதை மேலும வலுப்படுத்தவே பேனாக்கள் பேரவை முன்னெடுத்த இந்த நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.


புகைப்படங்கள் உதவி: பேனாக்கள் பேரவை



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் உள்ள பாசிச சக்திகள்.. அடையாளம் காண்போம்.. திருமாவளவன்

news

வாரத்திற்கு 90 மணி நேர வேலை... எல் அண்ட் டி சிஇஓ.,வுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் சூப்பர் பதில்!

news

ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.. முதல் ஆளாக பத்மராஜன் மனு செய்தார்!

news

பெரியார் சொல்லாதவற்றை சொன்னார் என பொய் பரப்பும் தற்குறிகள்.. துரைமுருகன் ஆவேசம்!

news

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க.. புதிய மசோதா.. சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல்

news

பொங்கலுக்கு ஊருக்குப் போலாமா.. இன்று முதல் 13ம் தேதி வரை .. 21,904 சிறப்புப் பேருந்துகள்!

news

தொடர் உயர்வில் தங்கம்.... விலை உயர்விற்கான காரணம் என்ன தெரியுமா?

news

பெரியார் குறித்த பேச்சு.. நாம் தமிழர் சீமான் மீது குவியும் புகார்கள்.. இதுவரை 11 மாவட்டங்களில் FIR

news

சென்னை புத்தகக் கண்காட்சியில்.. அட போட வைத்த பேனாக்கள் பேரவை.. அசரடித்த வாசிப்போம், நேசிப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்