பழைய சோறும் கொஞ்சம் பச்சை மிளகாயும்.. கூடவே நாலஞ்சு வெங்காயத் துண்டுகளும்.. ஆஹா.. அமிர்தம்!

Apr 05, 2024,07:47 PM IST
சென்னை: பழையது.. பழையது என்று சொன்னதுமே நாக்கில் எச்சில் ஊறுகின்றது. எளிமை உணவின் மறு உருவம் பழைய கஞ்சி எனப்படும் பழையது. பழைய கஞ்சி என்பது நம்முடைய பாரம்பரிய உணவு. காலம் காலமாக நம்மாட்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

பழையது என்று நாம் சொல்கின்ற பழைய கஞ்சி முந்தைய நாள் சோறு மிஞ்சியதும் அதில் தண்ணீர் ஊற்றிவிட்டு மறுநாள் சாப்பிடுவது . அருமையான நியூட்ரிசியஸ் உணவு இது. அதனுடன் கொஞ்சம் மோர் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் ருசியாக இருக்கும். அதற்கு சைடிஷ் ஆக பச்சை மிளகாய் ,ஊறுகாய் ,வெங்காயம் ஏற்றதாக இருக்கும். யாராவது காலையில் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டால் எங்கள் வீட்டில் ஐஸ் பிரியாணி என்று ஜாலியாக சொல்லிக் கொள்வோம். 

இன்றைய தலைமுறையில் யாரும் பழைய கஞ்சியை கண்கொண்டு பார்த்ததில்லை என்று தோன்றுகிறது. இப்போதெல்லாம் இட்லி, தோசை , பூரி, சப்பாத்தி, பாஸ்ட் புட் அது இது என்று சாப்பிடுகின்றோம். நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் காடு ,மேடுகளில் வேலைக்கு செல்லும் பொழுது பழைய கஞ்சி தான் கொண்டு செல்வார்கள். பழைய கஞ்சி கொடுக்கும் எனர்ஜி தான் அவர்களால் கடினமான வேலை செய்ய முடிந்தது. காலையில் எழுந்தவுடன் தேனீருக்கு பதிலாக நீராகாரம் தான் குடிப்பார்கள். இந்த நீராகாரம் உடல் சூட்டை தணிக்க வல்லது. அமெரிக்காவில் இருக்கும் பல 5 ஸ்டார் ஹோட்டல்களில் இந்த பழைய கஞ்சி மெனு கார்டில் முக்கிய இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



பழைய கஞ்சி குடல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் எளிய மருந்தாகும். எளிதில் செரிமானம் ஆகும் சக்தி கொண்டது. நாம் உண்ணும் உணவு சிறப்பாக செரிமானமாக பாக்டீரியாக்கள் முக்கியம். தேவையான அளவு பாக்டீரியாக்கள் உடம்பில் இல்லாவிட்டால் வயிறு வலி, வயிற்றுப்போக்கு, கேஸ் ட்ரபுள், அல்சர், மலச்சிக்கல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த பழைய கஞ்சியில் அதிக அளவு மனிதனுக்கு தேவைப்படக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. நாம் இந்த பழைய கஞ்சி உண்ணும் போது நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கின்றது.

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வயிறு வலி, தலைவலி, காய்ச்சல், முதுகு வலி என்றெல்லாம் வேலைக்கு விடுதலை கொடுத்து வீட்டில் இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களுடைய உணவு முறை அப்படி. ஆனால் நாம் தற்போது சாப்பிடும் உணவு வகைகளோ நமக்கு அனைத்து வகையான நோயையும் உண்டு பண்ணுகிறது. நாம் இப்போது ரெடிமேட் உணவு வகைகளையே விரும்புகின்றோம். ரெடிமேடு சப்பாத்தி, ரெடிமேடு பூரி, ப்ரைட் ரைஸ் என்றெல்லாம் சாப்பிடுகிறோம். டக்குனு சாப்பிட்டு விடலாம். வீட்டு வேலை சீக்கிரமாக முடிந்து விடும். இப்படி எல்லாம் யோசித்து நமக்கு நாமே நோயை உண்டு பண்ணுகின்றோம். நம்முடைய அவசர வாழ்க்கை பழைய கஞ்சி போன்ற அரிய உணவை அழித்து விட்டது. குக்கரில் அவசரம் அவசரமாக வைக்கும் சோறு மறுநாள் சாப்பிட முடிவதில்லை.

ராகி ,கம்பு போன்ற சிறு தானியங்களில் நார் சத்துக்கள் அதிகம் உண்டு. அவற்றை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைக்கும் போது அந்த உணவு நொதித்து விட்டமின் ,பொட்டாசியம், இரும்பு சத்து ,ஆகியவை அதிகரித்து நம்முடைய உடலுக்கு பலம் சேர்க்கிறது. இளமை மற்றும் பொலிவான  தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது. அந்த ஊற வைத்த உணவை , மறுநாள் கூழ் போன்று செய்து அதில் கொஞ்சம் மோர் சேர்த்து குடித்தால் உடலுக்கு கச்சிதமாக இருக்கும். அதனுடன் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். இவ்வாறு சாப்பிடும் போது உடலுக்கு நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் கிடைக்கின்றது. அவை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றது. 

நாம் தற்போது வெள்ளை அரிசியை உபயோகிக்கின்றோம். ஆனால் அதைவிட சிவப்பு அரிசி ,கைக்குத்தல் அரிசி, கவுனி அரிசி போன்றவை பயன்படுத்துவதன் மூலம் இன்னும் பலன்கள் அதிகம் உண்டு. ஏனென்றால் இந்த வகை அரிசிகள் பாலிஷ் செய்யப்படுவதில்லை. மேலும் சமைத்த சாதத்தை மண்பாண்டத்தில் 12 மணி நேரம் நொதிக்க விடுவதன் மூலம் இன்னும் சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றன.

உலகிலேயே பழைய சோறு தான் ஊட்டச்சத்து மிகுந்த பாரம்பரிய உணவு என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. பழைய சோறு சாப்பிடும் பொழுது தூக்கம் வரும், உடல் பெருந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளத் தேவையில்லை. சர்க்கரை நோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பழைய சாதம் சாப்பிடக்கூடாது.

பழசா இருந்தாலும்.. எப்போதும் மவுசோட இருக்கும் ஒரே உணவு இது மட்டுமே.. பாரம்பரியமான பழைய கஞ்சியை உண்டு மகிழ்வோம். நோயற்ற வாழ்வை எதிர்கொள்வோம்.

கட்டுரை: சந்தனகுமாரி

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்