பட்டையைக் கிளப்பும் பத்து தல.. வேகமாக முன்னேறும் விடுதலை.. வசூலில்!

Apr 01, 2023,02:36 PM IST
சென்னை: விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் நீரும் நெருப்புமாய் வெளியாகி தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது. இந்த இரண்டு பெரிய படங்களுக்கு பின் சொல்லும்படியான பெரிய படங்கள் எதுவும் வெளியாகாமல் தமிழ் சினிமா வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் 'பத்து தல' மற்றும் சூரியின் 'விடுதலை' திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சூறாவளி விச தொடங்கியுள்ளது. 

நடிகருக்காக ஒரு ரசிகர்கள் கூட்டமும், இயக்குநருக்காக மற்றொரு ரசிகர்கள் கூட்டமும் தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஒன்னுக்கு ஒன்னு சலச்சதில்ல என்று சொல்வது போல் இரு படங்களில் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை பார்ப்போம்.



சிம்புவின் 'பத்து தல'

நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கெளதம் மேனன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் 'பத்து தல'. சால்ட் அண்ட் பேப்பர், பெரிய தாடி என சிம்புவின் லுக்கில் மயங்கிய ரசிகர்கள் படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை கூடியது. மேலும் பத்து தல படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சிம்பு பேசிய பேச்சுக்கள் படத்தின் மீது கொண்ட ஆர்வத்தை வானளவிற்கு கொன்டு சென்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பத்து தல திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இது ஒரு யூஏ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் குடும்ப ரசிகர்களை இப்படம் அதிகம் ஈர்த்தது. தற்போது தியேட்டர்களில் வெற்றி நடைபோடும் பத்து தல திரைப்படத்தின் முதல் நாள் வசூலை பட குழு வெளியிட்டுள்ளது. இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

சூரியின் 'விடுதலை'

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் விடுதலை. வெற்றிமாறன் படம் என்றாலே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு உண்டு. பொல்லாதவன் தொடக்கி அசுரன் வரை தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறிதும் டேமேஜ் செய்யாத வெற்றிமாறன், விடுதலை படத்தின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 

நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கிய இப்படம் பல சவால்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டுள்ளது. ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் இளைஞர்களை அதிகம் ஈர்க்க, குடும்ப ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டது. முதல் நாளில் தமிழ்நாட்டில் 2.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ வசூல் விபரத்தை படக்குழு விரைவில் வெளியிடம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வார நாட்களில் வெளியான பத்து தல மற்றும் விடுதலை திரைப்படத்தின் வசூல் வரும் வார இறுதிகளில் வசூல் எகிறும் என எதிர்பாக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்