"இயக்குநர் அமீர் குறித்துப் பேசியது புண்படுத்தியிருந்தால்"... வருத்தம் தெரிவித்தார் ஞானவேல்ராஜா!

Nov 29, 2023,05:48 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: "நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணாவை காயப்படுத்தினால் நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தயாரிப்பாளர்  ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய இண்ட்ஸ்ட்ரி ஹிட் கொடுத்த படம் பருத்தி வீரன். கார்த்திக்கு மிகப் பெரிய அறிமுகத்தை இது கொடுத்தது. தயாரிப்பாளராகவும் ஞானவேல்ராஜாவுக்கு பெரும் அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்த படம் இது. 


நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமானார். நடிகர் பிரியாமணி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்காத பிரியாமணிக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது. இப்படம் வெளியானபோதே ஏகப்பட்ட பிரச்சினைகளுடன்தான் வெளியானது. அமீர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கித்தான் இப்படத்தை இயக்கி முடித்தார். இது அப்போதே பெரிதாக பேசப்பட்டது.




இந்த நிலையில், படம் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் மீண்டும் இதுதொடர்பான சர்ச்சை வெடித்தது. இயக்குனர் அமீர் பருத்திவீரன் இயக்கியதால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார். மேலும் அமீர் குறித்து பல்வேறு வார்த்தைகளையும் அவர் பிரயோகித்திருந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது. 


அவரது பேச்சு, அவர் பயன்படுத்திய வார்த்தைகள், அவரது பாடி லாங்குவேஜ் மிகவும் அறுவறுக்கத்தக்க வகையில், வன்மத்துடன் கூடியதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். உச்சகட்டமாக இயக்குநர் பாரதிராஜ கடும் கோபத்துடன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். பாரதிராஜாவே கோபமாகி விட்டதால் திரைத்துறையினர் மொத்தமாக வெடித்துக் கிளம்பும் அபாயகரமான சூழல் உருவானது.


இதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக தற்போது ஞானவேல்ராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஞானவேல்ராஜாவின் விளக்கம் என் பெயரில் அந்த அறிக்கை வெளியாியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 


பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதைப்பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் அவரை கூப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்  என்று கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.


தனது அறிக்கையில், இயக்குநர் அமீர் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகள் என்று ஞானவேல்ராஜா குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே இந்தப் பிரச்சினை இப்போதைக்கு ஓயுமா என்று தெரியவில்லை.


இதற்கிடையே, மன்சூர் அலிகான் விவகாரத்தில் ஏகப்பட்ட திரையுலக சங்கங்கள் கிளர்ந்தெழுந்து வந்து திரிஷாவுக்கு ஆதரவாக பேசியிருந்தன. ஆனால் இயக்குநர் அமீர் விவகாரத்தில் எந்த சங்கமும் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக சில இயக்குநர்கள் மட்டுமே கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் திரையுலக ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் பாரதிராஜா கூட சங்கத்தின் சார்பாக கண்டனம் தெரிவித்து அறிக்கை விடவில்லை, மாறாக தனிப்பட்ட ரீதியில்தான் அவர் அறிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்