அமீர் சொன்ன குற்றச்சாட்டு என்ன?.. ஓபனா சொல்லுங்க.. ஞானவேல்ராஜாவுக்கு சசிக்குமார் கிடுக்கிப்பிடி!

Nov 29, 2023,05:48 PM IST

சென்னை: இயக்குநர் அமீர் சொன்ன பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்ன.. பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்காக என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டுள்ளார் இயக்குநர் சசிக்குமார்.


பருத்தி வீரன் பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல. இயக்குநர் அமீர் மீதான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் கருத்துக்கள் திரையுலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இயக்குநர்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர். இதன் உச்சமாக மூத்த இயக்குநர் பாரதிராஜா நேற்று காட்டமான அறிக்கை ஒன்றை விட்டார்.


இந்த அறிக்கையின் எதிரொலியாக இன்று காலை வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. அதில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக அமீர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். நான் பதில் அளித்தபோது சில வார்த்தைகளை குறிப்பிட்டேன். அது அவரை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு முடித்துக் கொண்டு விட்டார்.




இப்போது இந்த பொத்தாம் பொதுவான அறிக்கைக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இயக்குநர் சசிக்குமார் முதல் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது 


அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?


"நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்" என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?


திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்?   இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? என்று கேட்டுள்ளார் சசிக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு சேசிங் சோதனை.. பஞ்சாபிடமிருந்து வெற்றியைப் பறிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்