வடிவேலு போட்டோவை ஷேர் செய்த பார்த்திபன்.. மீண்டும் கூட்டணியா.. பழைய பூங்காற்று திரும்புமா?

Feb 19, 2025,06:26 PM IST

சென்னை: நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எதுன்னு தெரியாது. ஆனா.. என கேப்ஷன் கொடுத்து வடிவேலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மீண்டும் வடிவேலு பார்த்திபன் கூட்டணியா என ஆர்வமாக கேட்க ஆரம்பித்து விட்டனர்.


பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் தற்போது உள்ள காலம் வரை காமெடிக்கென்று ஒரு தனி கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் காமெடி எப்போதுமே தனி ராஜபாட்டையாக திகழ்ந்து வருகிறது. எத்தனையோ ஜாம்பவான் காமெடியன்களையும் தமிழ் சினிமா பார்த்துள்ளது. மொழிகளைத் தாண்டி பிற மொழியினரும் நமது காமெடியன்களை ரசித்துள்ளனர்.




பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் நாகேஷ் மனோரமா கூட்டணியில் உருவான காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து செந்தில் கவுண்டமணி கூட்டணியில் உருவாகிய காமெடி தமிழ் சினிமா வட்டாரத்தில் தனி இடம் பிடித்தது. அதேபோல் காலப்போக்கில் கவுண்டமணி செந்தில் கூட்டணியில் உருவாகும் காமெடிகள் மெல்ல மெல்ல குறைந்து வடிவேலு - விவேக் காமெடி களை கட்டியது. இந்த இருவரும் இடம் பெறாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு காமெடி கொடி கட்டிப் பறந்தது.


அதன் பின்னர் சந்தானம், சூரி, யோகிபாபு என பலரும் வந்தனர். ஒவ்வொருவரும் தனித்து நின்று அசத்தினர். இன்று  சரியான அளவில் காமெடியன்கள் இல்லாமல் தமிழ் சினிமாவே டல்லாகியுள்ளது. வேறு பாதையில் சினிமா நடைபோடத் தொடங்கி விட்டது. யோகிபாபு மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான காமெடியனாக வலம் வருகிறார்.


இப்படிப்பட்ட சூழலில் பார்த்திபன் - வடிவேலு காம்போவை நம்மால் மறக்கவே முடியாது. இருவரும் சேர்ந்து செய்த சினிமா சேட்டைகள் அப்படி. தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகர்கள் உயர்ந்திருந்தாலும் நடிகர் பார்த்திபனின் எதார்த்தமான நடிப்பு, கலகலப்பான பேச்சு, மனதில் பட்டதை உடனே பேசும் தைரியம், என அனைத்து நடிகர்களையும் உற்று நோக்க வைத்தது. ஒரு நடிகர்,எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குனர், பேச்சாளர், என்று பன்முகத் திறமைகளை கொண்டவர். 




குறிப்பாக 90ஸ் காலத்தில் எப்படி கவுண்டமணி செந்தில் காமெடி இன்றுவரை பேசப்பட்டு வருகிறதோ அதற்கு நிகராக பார்த்திபன் வடிவேல் காம்போவில் உருவான காமெடிக்கு என்றே ஒரு தனி மார்க்கெட் இருந்தது. அதாவது இவர்கள் காமெடி இப்போது வரை டிரெண்டிங்கில் கலக்கிக் கொண்டு வருகிறது. இவர்கள் கூட்டணியில் உருவாகிய காமெடிகளை இன்று பார்த்தால் கூட  சலிக்காத அளவிற்கு ரசிக்கும்படி அமைந்துள்ளது.


பார்த்திபன் வடிவேலு கூட்டணி முதன் முதலில் சேரன் இயக்கத்தில் உருவான பாரதி கண்ணம்மா படத்திலிருந்து தொடங்கியது. அந்தப் படத்தில் வடிவேலு உன் கையை காலா நினைக்கிறேன் என்று கூற.. கைய கால நெனச்சா.. கால என்னவா நினைப்ப.. என்று கேட்கும் காமெடியாக இருக்கட்டும், ஒரு குத்து மதிப்பா சொன்னேன் என்று வடிவேல் கூற பார்த்திபன் வடிவேல் கையில் குத்தி இதுக்கு என்ன மதிப்பு என  வார்த்தையில் வடிவேலை அழ வைத்து விடுவார். 




அதிலும் வெற்றிக் கொடி கட்டு படத்தில் மீண்டும் இதே கூட்டணியில் உருவாகிய காமெடிகளை சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு பாப்புலரானது. வடிவேலு  துபாயில் வேலை செய்து இந்தியாவிற்கு வந்து ஓவர் பில்டப் செய்வது போல அவருடைய கேரக்டர் சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்த  காமெடியில் பார்த்திபன் துபாயில் நீ கக்கூஸ் கழுவுற கம்பெனியில  தான வேலை பார்த்த எனக் கூற.. படம் முழுக்க வடிவேலை வச்சு செய்வார் பார்த்திபன்.  ஒரு கட்டத்தில் வடிவேலு இந்த விளையாட்டே வேணாம் டா சாமி என ஓடி விடுவார்.


இது மட்டுமா வந்துட்டான்யா வந்துட்டான்யா.. குண்டக்க மண்டக்க.. அது என்ன நல்ல மீன்கள் விற்கப்படும்.. என்ற பார்த்திபன் மற்றும் வடிவேல் கூட்டணியில் உருவாகிய காமெடிகள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.  இப்படி வடிவேலு பார்த்திபன் கூட்டணியில் உருவாகிய காமெடிகள் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் தனி ட்ரெண்டாக உருவெடுத்தது.  மீண்டும் வடிவேலு பார்த்திபன் கைகோர்த்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இவர்களின் காமெடி இன்றுவரை ரசிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெற்றிக்கான தேர்தல் கூட்டணி எதுன்னு தெரியாது.ஆனா.. என பதிவிட்டு, தன்னுடன் வைகைப்புயல் வடிவேல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். லேட்டஸ்டாக எடுத்த படம் என்று தெரிகிறது. இதைப் பார்த்ததும் ரசிகர்கள் பலரும் ஓடி வந்து மீண்டும் பார்த்திபன் வடிவேலு கூட்டணி இணையுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  பார்த்திபன் வடிவேலு இணைந்தால் நன்றாக இருக்கும். இவர்கள் கூட்டணியில் உருவாகும் காமெடிகள் ரசிப்பதற்காக எதிர்பார்க்கிறோம் எனவும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




சமீபத்தில்தான் சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேங்கர்ஸ் என்ற படம் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சுந்தர் சி கதாநாயகனாகவும், நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் சிங்காரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர்களுடன்  கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் வடிவேலுவின் தோற்றம் வித்தியாசமான கெட்டப்பில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திரைத் துறையினர் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

How to impress your wife?.. மனைவியை மகிழ்விக்க என்ன செய்யலாம்.. கணவர்களே இங்க வாங்க!

news

"கெட்அவுட் வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி மட்டுமே!" - அமைச்சர் பி.கே.சேகர்பாபு..!

news

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

news

மட்டன் சுக்கா.. மதுரை ஸ்டைலில் ச்சும்மா சுர்ருன்னு ஏறும் டேஸ்ட்டுடன்.. வாங்க சமைக்கலாம்!

news

கை கொடுக்கும் இயற்கை மருத்துவம்.. அதன் மகத்துவம் மற்றும் சாராம்சங்கள்!

news

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்.. 3 நாட்கள் நடக்கப் போகும் சூரியக் கதிர் விழும் அற்புத நிகழ்வு!

news

வெறும் வெந்தயத்தை விடுங்க.. முளைகட்டியவெந்தயம் சாப்பிட்டுப் பார்த்திருக்கீங்களா?

news

சென்னை கோயம்பேடு சந்தை..இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா..?

அதிகம் பார்க்கும் செய்திகள்