போராட்டங்களே இவரது களம்.. ஊர்க்காரர்கள் வைத்த பெயர் "புரட்சிப் பெண்".. நீலம் தேவியின் மறுபக்கம்!

Dec 14, 2023,06:58 PM IST

ஹிஸ்ஸார்:  நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திக் கைதாகியுள்ள ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸாரைச் சேர்ந்த நீலம் தேவிக்கு ஊரில் என்ன பெயர் தெரியுமா.. "புரட்சிக்காரி".. காரணம், இவர் மக்கள் நலப் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து வந்ததால் இந்தப் பெயர் வந்துள்ளது. 


சமூகத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ளார் நீலம் தேவி. இவருக்கு 42 வயது என்று முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது 37 வயதுதான் ஆவதாக புதிய தகவல்கள் கூறுகின்றன.


ஜிந்த் மாவட்டம் காஷோ குர்த் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நீலம் தேவி. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஊரில் இவரை யாருமே நீலம் தேவி என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லையாம். மாறாக, புரட்சிப் பெண் என்றுதான் இவரை அழைக்கிறார்கள். இவருக்கு தாய், தந்தை, இரண்டு தம்பிகள் உள்ளனர். தம்பிகள் இருவரும் பால்காரர்கள். நீலம் நன்கு படித்தவர். எம்.ஏ, எம்.பில், பிஎட் படித்துள்ளார். ஆசிரியை தகுதித் தேர்வும் எழுதி பாஸாகியுள்ளார். ஆனால் எந்த வேலையிலும் அவர் ஈடுபடவில்லை. வேலைக்காக அவர் கவலைப்படவும் இல்லையாம்.




அவரது மனம் முழுவதும் சமூக அவலங்கள் பக்கமே திரும்பியிருந்திருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்கிறார் அவர். கடந்த 2015ம் ஆண்டு அவருக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து குணமடைந்த பின்னர் அவர் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். பல போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.


சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் மீது ஆழ்ந்த பற்று கொண்ட இவர் தனது பெயரைக் கூட நீலம் ஆசாத் என்றுதான் சொல்லிக் கொள்வாராம். விவசாயிகள் பிரச்சினை, மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சினை உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். மே 28ம் தேதி ஜந்தர் மந்தரில் நடந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கான போராட்டத்தில் கலந்து கொண்டு கைதும் ஆகியுள்ளார்.


ஹரியானா மாநிலத்தில்  ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்றையும் அம்பலப்படுத்தியவர் நீலம் தேவி. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து தனக்கு நெருக்கமானவர்கள், சொந்தக்காரர்கள், குடும்பத்தாரிடம் குமுறிக் கொண்டே  இருப்பாராம்.


நீலம் தேவியின் போராட்டம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. அவரது தாயார் சரஸ்வதி இதுகுறித்துக் கூறுகையில், காலையில் கூட அவரிடன் பேசினேன். போராட்டம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. தான் டெல்லியில் இருப்பதையும் கூட அவர் சொல்லவில்லை என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

தேசிய ஜனநாயக கூட்டணியில்.. அதிமுக இணைவது மகிழ்ச்சி.. பிரதமர் நரேந்திர மோடி..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 12, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

அதிகம் பார்க்கும் செய்திகள்