Loksabha Elections 2024.. 7 கட்டமாக மக்களவைக்குத் தேர்தல் - ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை

Mar 16, 2024,08:49 PM IST

டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.


17வது நாடாளுமன்றத்தின் (லோக்சபா) பதவிக்காலம் வருகின்ற ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதற்கு முன்னர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு புதிய அரசு அமைக்க வேண்டிய சூழல் தற்போது  ஏற்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தாண்டு நடைபெறும்  நாடாளுமன்ற தேர்தல் 18வது நாடாளுமன்ற தேர்தலாகும்.


நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். பல நாட்களாக தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று கட்சிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா காரணமாக தேர்தல் தேதி தள்ளிப்போனதாக கூறப்பட்டது.




இந்நிலையில்,  இன்று மாலை 3  மணிக்கு, 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும். முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும். கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.


தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர்  கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தேதி குறித்த விவரங்களை வெளியிட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்