"கையைக் காட்டுங்க டைரக்டர் சார்".. சர்ப்பிரைஸ் கொடுத்த பார்க்கிங் ஹரிஷ் கல்யாண்!

Dec 16, 2023,05:06 PM IST
சென்னை: பார்க்கிங் படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. 

ஒரு பார்க்கிங் இடத்திற்காக இரண்டு ஆண்கள் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையினால் ஏற்படும் விளைவுகளே பார்க்கிங் படத்தின் மையக் கருவாகும். இதை எதார்த்தமான நிகழ்வுகளுடன் மக்கள் ரசிக்கும் படியாக படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர். நடிகர்களின் எதார்த்த நடிப்பில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது.



இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில்,  ஊடகங்கள் கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய் சேர்ந்தது. வெள்ளம், மழை என நிறைய இடையூறுகள் இருந்தாலும் இந்தப் படத்திற்கு மக்கள் நிறைய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்த சினிஸ் அண்ணனுக்கு நன்றி. 

லாக்டவுன் சமயத்தில் மூன்று கதைகள் சொன்ன போது, இது செய்யலாம் என அவர்தான் சொன்னார். என் மீதும் படம் மீதும் சுதன் சார் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இப்போது படத்தின் ரிசல்ட் பார்த்து அவர் ஹேப்பி. ஹரிஷ் கல்யாண் அண்ணனிடம் கதை சொல்லும் போது ஒரு பதட்டம் இருந்தது. ஆனால், அவரும் இந்தக் கதையில் ஈடுபாடு காட்டி நிறைய சப்போர்ட் செய்தார். 

எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்டரி ஆக்டர். படப்பிடிப்புத் தளத்தில் அந்தக் கதாபாத்திரத்திலேயே இருந்தார். படத்தில் வருவது போலயே ரொம்ப கோபமாக இருந்தார். படம் முழுவதுமே இந்துஜாவுக்கு கர்ப்பமாக இருப்பது போன்ற சவாலான கதாபாத்திரம். நல்ல படத்தில் நல்ல கதாபாத்திரம் என இந்துஜா ஒத்துக் கொண்டார். பிரார்த்தனா எல்லாமே சிங்கிள் டேக்கில் நடித்து விடுவார். படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமே நன்றி என்றார் அவர்.



நடிகர் ஹரிஷ் கல்யாணம் பேசுகையில், படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மீடியாவுக்கு நன்றி. இதன் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். 

இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார். படத்தில் வேலை பார்த்த எம்.எஸ். பாஸ்கர் சார், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

சக்ஸஸ்.. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது வழித்தடத்தில்.. சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது!

news

வளைகாப்பு நடத்துவது எப்படி? வேலூர் காங்கேயநல்லூர் அரசுப் பள்ளி மாணவிகளின் ரீல்ஸ்..டீச்சர் சஸ்பெண்ட்!

news

Su Venkatesan Vs Vanathi Srinivasan.. உங்களுக்கு ஒவ்வாமையா.. முதல்ல பன் பட்டருக்கு வழி சொல்லுங்க!

news

ஐபோன் 16 விற்பனை தொடக்கம்.. நீண்ட க்யூவில் நின்று போட்டி போட்டு வாங்கிச் சென்ற ஐ போன் பிரியர்கள்!

news

திருப்பதி லட்டில் கொழுப்பா... குடும்பத்தோடு சத்தியம் செய்ய நாயுடு ரெடியா? .. ஜெகன் கட்சி சவால்!

news

உளவியல் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகளுடன்.. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்.. வைரமுத்து

news

என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னேன்ல.. செய்தியார்களிடம் சீறிய ரஜினிகாந்த்!

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

அதிகம் பார்க்கும் செய்திகள்