India at Paralympis 2024.. 29 பதக்கங்களுடன் அட்டகாசமாக நிறைவு செய்த தீரர்கள்.. சபாஷ் இந்தியா!

Sep 08, 2024,06:05 PM IST

பாரீஸ்: பாரீஸில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டி இந்தியர்களுக்கு மறக்க முடியாத அற்புதமான போட்டித் தொடராக மாறி விட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களைக் குவித்து அசத்தி விட்டது இந்தியா.


பாரீஸிலில் இன்றுடன் இந்தியாவின் பாராலிம்பிக்ஸ் பதக்க வேட்டை முடிவுக்கு வந்தது. இந்தியா  இந்த போட்டித் தொடரில் 7 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களைப் பெற்று அசத்தி விட்டது. இதுதான் பாராலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இந்தியா பெற்ற அதிகபட்ச ஒட்டுமொத்த பதக்கங்கள் என்பது புதிய சாதனையாகும்.


பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 18வது இடம் கிடைத்தது. நமது பக்கத்து நாடான பாகிஸ்தான் அணி ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 79வது இடத்தைப் பிடித்தது.




2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தியது. பெரிய பெரிய அணிகளுக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் அளித்து அசத்தி விட்டது. உலகின் தலை சிறந்த 20 அணிகளில் ஒன்றாக இந்தியாவும் இந்தத்  தொடரில் உருவெடுத்தது இந்தியர்களுக்கு மிகப் பெரிய பெருமையாகும்.


பாரீஸில் காட்டிய இந்தத் திறமையால் அடுத்து 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இன்னும் பெரிய முன்னேற்றத்தைக் காட்டும், அதிக பதக்கங்களை வெல்லும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.


56 ஆண்டு கால பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா ஒரு தொடரில் அதிக அளவில் பதக்கங்களை அள்ளுவது இதுவே முதல் முறையாகும்.  இதற்கு முன்பு கடந்த முறை நடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்தது. இந்த முறை கூடுதலாக  2 பதக்கங்களை வென்று அசத்தி விட்டது.


பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்கள்:


தங்கப் பதக்கம்: அவனி லக்கேரா, குமார் நிதேஷ், சுமித் அன்டில், ஹர்வீந்தர் சிங், தரம்பீர் நைன், நவதீப் சிங் பிரவீன் குமார்.


வெள்ளிப் பதக்கம்: மனீஷ் நர்வால், நிஷாத் குமார், யோகேஷ் கதுனியா, துளசிமதி முருகேசன், சுஹாஸ் யதிராஜ்,  அஜீத் சிங் யாதவ்,  சரத்குமார், சச்சின் கிளாரி, பிரணவ் சூர்மா.


வெண்கலப் பதக்கம்: மோனா அகர்வால், பிரீத்தி பால் (2), ரூபினா பிரான்சிஸ், மனீஷ் ராமதாஸ், ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார், நித்யா சிவன், தீப்தி ஜீவன்ஜி, மாரியப்பன் தங்கவேலு, சுந்தர் சிங் குர்ஜார், கபில் பார்மர், ஹோக்கேடோ ஹோட்டோஷோ சேமா, சிம்ரன் சர்மா.


மகாவிஷ்ணுக்கள் பாடம் கற்கட்டும்:


இப்படி வரலாறு படைத்து, இந்தியாவின் பெயரை உயர்த்திப் பிடித்து, ஒலிம்பிக் போட்டியில் கூட நம்மால் சாதிக்க முடியாததை அட்டகாசமாக சாதித்து புதிய சாதனை படைத்த இந்த மாற்றுத் திறனாளிகள் மிக மிக உயர்ந்தவர்கள்.. இப்படிப்பட்டவர்களைப் போய் பாவம் செய்தவர்கள், கர்மா, போன பிறவியில் தப்பு செய்தவர்கள் என்று ஒருவர் ஜஸ்ட் லைக் தட் பேசி விட்டுச் சென்றதுதான் பெரும் வேதனையாக இருக்கிறது.


இப்படிப்பட்ட பெருமைக்குரிய வீரர்கள், வீராங்கனைகளிடம் மகாவிஷ்ணு போன்ற மடமைவாதிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

தொடர் உயர்வில் தங்கம்... சவரன் 57,000த்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி.. இப்படியே போனால் எப்படி!

அதிகம் பார்க்கும் செய்திகள்