கோலாகலமாக தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக்ஸ்.. கம்பீரமாக அணிவகுத்து வந்த இந்திய அணி!

Jul 27, 2024,07:57 AM IST

பாரீஸ்:  பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகலாமான தொடக்க விழாவுடன் தொடங்கியுள்ளன. இதில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடி ஏந்தி வந்தார்கள் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவும், டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சரத்  கமலும்.


இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு விழா தொடங்கி கோலாகலமாக முடிவடைந்தது. கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள், வீராங்கனைகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அணி வகுத்து வந்தனர். பிரெஞ்சு தலைநகரான பாரீஸின் சீயன் ஆற்றுப் பகுதியில் நடந்த இந்த விழா பார்க்கவே படு ஜோராக இருந்தது.  தொடக்க விழா நடந்தபோது கன மழை பெய்தபோதும் கூட விழாவைக் காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை அது பாதிக்கவில்லை.




தொடக்க விழாவில் இந்திய அணியினர் மிடுக்காக பாரம்பரிய உடை அணிந்து கம்பீரமாக நடை போட்டு வந்தனர். சரத் கமலும், பி.வி. சிந்துவும் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினர். 


வழக்கமாக போட்டி நடைபெறும் மெயின் ஸ்டேடியத்தில்தான் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நடைபெறும். ஆனால் இந்த முறை முதல் முறையாக வெளியில் விழா நடத்தப்பட்டுள்ளது. தொடக்க விழாவை சியன் ஆற்றின் கரையோரமாக ஆயிரக்கணக்கானர் கூடியிருந்து கண்டு களித்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் விழாவை நேரில் கண்டு களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அக்கம் பக்கத்து வீடுகள், மொட்டை மாடிகளிலும் மக்கள் கூடியிருந்தனர். அது 2 லட்சம் பேர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிக மிக வித்தியாசமான முறையிலும், பிரமாண்டமாகவும் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.


ஒலிம்பிக்கில் இந்திய அணி




பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 117 பேர் கொண்ட வலுவான அணி கலந்து கொள்கிறது. இதில் தொடக்க விழாவில் 78 பேர் கலந்து கொண்டனர்.


இந்தியா கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கம் பெற்றிருந்தது. இந்த முறை அதை விட கூடுதலாக வாங்கும் என்ற நம்பிக்கையில் இந்திய அணியும், மக்களும் உள்ளனர். இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக 35 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதில் தங்கம் 10, வெள்ளி 9 மற்றும் வெண்கலம் 16 ஆகும்.


ஒரு ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்ச பதக்கங்களை வென்றது என்றால் அது 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிதான். அதில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தியிருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை அள்ளும் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்துள்ளனர்.


Best of luck Team India!

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்