பாராலிம்பிக்ஸ் 2024.. ஜூடோவில்.. பதக்கம் வென்ற.. முதல் இந்திய வீரர் கபில் பர்மர்..!

Sep 06, 2024,11:34 AM IST

பாரிஸ்: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஜுடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கபில் பர்மர்.


பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு செப்டம்பர் 8 வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியர்கள் 84 பேர் உட்பட மொத்தம் 4400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் தங்கப் பதக்கத்தையும், பிரணவ் சர்மா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.




இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம், ஒன்பது வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் கிடைத்தது. 2024 பாரா ஒலிம்பிக் போட்டிகள் இந்தியா 24 பதக்கங்களை வென்று 13 வது இடத்திற்கு முன்னேறியது. 


இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜூடோ போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் வீரர் எலிட்டன் ஒலிவிராவை வீழ்த்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கபில் பர்மர்  வெண்கல பதக்கத்தை வென்றார். இவர் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


கபில் பர்மர்  ஜூடோவில் வெண்கல பதக்கத்தை வென்ற நிலையில் மேலும் ஒரு பதக்கம் என இந்தியாவுக்கு 25 பதக்கங்கள் கிடைத்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்