பாங்காக்: பிரிட்டனைச் சேர்ந்த நதி ஒடின்சன் என்ற ஸ்கை டைவர் சாகசத்திற்காக 29வது மாடியிலிருந்து குதித்த போது, பாராசூட் பழுதானதால் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
சாகசம் செய்யப் போய் சாவில் முடிந்துள்ளது ஒருவரின் வாழ்க்கை. விதி ஒருவர் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடும் என்பதை ஊகிக்கவே முடியாது.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவர் நதி ஓடின்சன். பல சாகசங்களை நிகழ்த்தியவர். 33 வயதுதான் ஆகிறது. பல நாடுகளில் சாகசம் செய்துள்ளார். Nathys sky photogrphy என்ற பேஸ்புக் பக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலோயர்களும், 5000த்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் கொண்டுள்ளது அவரது பேஸ்புக் பக்கம். நிதி ஒடின்சன் பல சாகச வீடியோக்களை எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருடைய சாகசங்களை அதிகமோனார் விரும்பி பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள 29 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியில் இருந்து நதி ஒடின்சன் பாராசூட் உதவியுடன் கீழே குதிக்க முயன்றுள்ளார். அப்பொழுது பாராசூட்டில் பழுது ஏற்பட்டு விரியாமல் இருந்துள்ளது. நதி எவ்வளவோ போராடியும் அதனை திறக்க முடியவில்லை. இதனால் படு வேகமாக தரையில் விழுந்த அவர் படுகாயமடைந்தார். தலை சிதறி, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரனை மேற்கொண்டனர். நதி ஒடின்சன் கீழே குதிப்பதை வீடியோ எடுத்தவரிடமும் தாய்லாந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பாதுகாவலர்கள் கூறுகையில், எதோ தரையில் விழுந்தது போல பலத்த சப்தம் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, ஒரு பெண் அழுது கொண்டிருந்தார். அப்போது தான் நதி ஒடின்சன் கீழே விழுந்தது தெரியவந்தது என்று கூறினார்கள்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, நதி ஒடின்சன் பாராசூட் விரியாமல் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் முகநூல் பின் பாலோயர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. கொசுவைப் பிடிச்சு.. இந்தப் பொண்ணோட ஹாபி என்ன தெரியுமா?
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
{{comments.comment}}