விவசாயிகள் புறக்கணிப்பு : மாபெரும் போராட்டம் வெடிக்கும்.. பண்ருட்டி வேல்முருகன்

Jan 07, 2023,09:10 AM IST
சென்னை: நெய்வேலி என்எல்சி நிறுவனம், உரிய இழப்பீடுகளை வழங்குவதில் விவசாயிகளை புறக்கணித்தால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கழக தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எச்சரித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்கவிருப்போருக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீண்ட நெடிய நாட்களாக, குரல் எழுப்பியும், போராடியும் வருகிறது.

என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களின் அவலங்களையும், துயரங்களையும், கண்கூடாக பார்த்தவன் என்கிற முறையிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான நான், மண்ணின் மைந்தன் என்கிற முறையிலும், இத்தகைய கோரிக்கைகளையும், போராட்டங்களையும்  முன்னெடுத்து வருகிறேன்.
பொதுமக்கள், விவசாயிகளிடம் எடுத்த, எடுக்கப்பட உள்ள நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தியாசமின்றி ஒரு செண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்றுமனை குறைந்தபட்சம் 20 செண்டும் வழங்க வேண்டும்.

வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு என்எல்சியில் நிரந்தர வேலையும், வேலை பெற விரும்பாதவர்களுக்கு  50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டத்தை, சமீபத்தில் கூட அனைத்து கட்சிகளின் சார்பில் எனது தலைமையில் முன்னெடுத்திருந்தேன்.
அதுதவிர, நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்கவிருப்போருக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்குவது தொடர்பாக, விவசாயிகளை அழைத்து முத்தரப்பு  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், இதனை கருத்திக்கொள்ளாமல்,  என்.எல்.சி நிர்வாகம், அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்களை மட்டும் அழைத்து, வடலூரில் உள்ள மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தியுள்ளது ஏற்புடையதல்ல. இக்கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்காததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான நானும், நிர்வாகிகளும், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.

இக்கூட்டம் நடப்பதை அறிந்து வந்த ஏராளமான விவசாயிகளை அனுமதிக்காமல், ஆங்காங்கே காவல்துறையை வைத்து மிரட்டியதும், விவசாயிகள் வந்த வாகனங்களை நிறுத்தி, சாவிகளை பறிமுதல் செய்ததும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தி, நிலங்களை பறித்து விடலாம் என நினைப்பது, மனித உரிமைக்கு முரண்பாடானது. மாவட்ட நிர்வாகத்தின் அத்தகைய போக்கு சர்வாதிகாரத்துக்கு ஒப்பானது.

எனவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, விவசாயிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாயிகளுடனான சுமூக உறவை ஏற்படுத்தி கொண்டு தான், நிலத்தை அளவீடு செய்வதற்கோ, நிலத்தை கையகப்படுத்துவதற்கோ செல்ல, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.

இதனை மீறி, காவல்துறை, என்எல்சி நிர்வாகத்தை வைத்துக்கொண்டு, மாவட்ட நிர்வாகம், நிலத்தை கையகப்படுத்த வந்தால், பாதிக்கப்பட்ட கிராம மக்களையும், விவசாயிகளையும் ஒன்று திரட்டி, மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

--

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்