கூடலூர் சிறுத்தையை பிடித்தது எப்படி?.. யானை மீது போய் ஊசி போட்ட வனத்துறை டாக்டர்!

Jan 07, 2024,04:11 PM IST

கூடலூர்: டிரோன் கேமரா மூலம் சிறுத்தையைக் கண்டறிந்து, அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து, 2 முறை மயக்க ஊசி போட்டு அதைப் பிடித்துள்ளனர்.


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒரு சிறுத்தை கடந்த 2 மாதமாக நடமாடி வந்தது. இந்த சிறுத்தை பந்தலூர், கூடலூர் சுற்றுப் பகுதிகளில் நடமாடி வந்தது. அவ்வப்போது ஆடு, மாடுகளைப் பிடித்துச் சென்றது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.


அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறி கால்நடைகளை தாக்கி வந்த சிறுத்தை, கடந்த மாதம் பழங்குடியினர் குடியிருப்புக்குள் புகுந்தது. வீட்டிலிருந்து வெளியே வந்த சரிதா என்ற பெண்ணை சிறுத்தை கடித்ததால் அவர் படுகாயமடைந்தார்.  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அதே நாளில் மேலும் இருவரை காயப்படுத்தியது சிறுத்தை.




இதையடுத்து சிறுத்தையை உடனடியாக பிடிக்கக் கோரி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு 6 இடங்களில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும் 15 இடங்களில் சிசிடிவி கேமராக்களும் வைக்கப்பட்டன. அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து சிறுத்தையைப் பிடிக்க 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.


இந்த நிலையில் நேற்று நான்சி என்ற 3 வயது சிறுமியை சிறுத்தை தாக்கியதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மக்கள் பெரும் கொந்தளிப்புக்குள்ளானார்கள். நேற்று விடிய விடிய பந்தலூர் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டது.


அதன்படி முதுமலையிலிருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அதில் ஒரு யானையில் ஏறிக் கொண்டு வனத்துறை டாக்டர் ராஜேஷ்குமார் சென்றார். பெருங்கரைப் பகுதியில் டிரோன் மூலமாக சிறுத்தை இருந்த பகுதி அடையாளம் காணப்பட்டு  வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் துப்பாக்கி மூலமாக மயக்க ஊசி போடப்பட்டது. ஒரு ஊசி போட்டும் சிறுத்தை மயங்கவில்லை. அந்தப் பகுதியில் ஒரு புதரில் போய்ப் பதுங்கிக் கொண்டது. இதையடுத்து மீண்டும் ஒரு டோஸ் மயக்க ஊசி போடப்பட்டது.  அதைத் தொடர்ந்து சிறுத்தை மயக்க நிலைக்குப் போய் விட்டது.


அதன் பின்னர் சிறுத்தையை வலை போட்டு பிடித்து அங்கிருந்து தூக்கி வந்தனர். கூண்டு வண்டியில் ஏற்றி அதை முதுமலைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பிடிபட்ட சிறுத்தையை தங்களிடம் காட்டாமல் வனத்துறையினர் முதுமலைக்கு கொண்டு போனதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

அதிகம் பார்க்கும் செய்திகள்