பஞ்சு மிட்டாய் விக்கப் போறீங்களா..  அப்ப லைசன்ஸ் கட்டாயம்  பாஸ்..  புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்!

Feb 12, 2024,04:48 PM IST

புதுச்சேரி: பஞ்சு மிட்டாய் வழங்கும்  கேட்ரிங் நிறுவனங்கள் கட்டாயம் உரிமம் வைத்திருக்க வேண்டும் என புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.


புதுச்சேரியில் பிப்ரவரி 9ம் தேதி பஞ்சு மிட்டாயில் விஷ நிறமி கலக்கப்படுவதை உணவு பாதுகாப்புத்துறை கண்டு பிடித்தது. இதனால் பஞ்சு மிட்டாய்க்கு அரசு தடை விதித்தது. பஞ்சு மிட்டாய் பிடிக்காத குழந்தைகள் உண்டா என்ன? அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான மிட்டாய் தான் பஞ்சு மிட்டாய். அந்த பஞ்சு மிட்டாய்க்கு தற்பொழுது போதாத காலம் என்று தான் கூற வேண்டும்.




புதுச்சேரி, உணவு பாதுகாப்பு அதிகாரியான ரவிச்சந்தர் பஞ்சுமிட்டாயை வாங்கி சோதனை செய்த போது தான் அந்த திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, மனிதர்களுக்கு கேன்சரை உருவாக்கும் ரசாயனம் இந்த பஞ்சு மிட்டாயில் கலந்து இருப்பது தெரிய வந்ததுள்ளது. குறிப்பாக, ரோடமின் பி என்ற  வேதிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரசாயனம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியாதாம். குறைந்த விலையில் இந்த ரசாயனம் கிடைப்பதால் இதனை வாங்கி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்தவர்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.


புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயனம் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதன் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கக் கூடாது. புதுச்சேரி அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பஞ்சு மிட்டாய் உற்பத்தி செய்பவர்களை கண்டுபிடித்து உற்பத்தி இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வேதி பொருட்கள் கலந்து இருப்பதாக வெளியான தகவலை அடுத்து தற்போது இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தான் உணவு பாதுகாப்புத்துறை ஒரு உத்தரவை  பிறப்பித்துள்ளது.


திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் சப்ளை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு நிறுவனங்கள் கட்டாயம் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிமம் இல்லை என்றால்  அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் உணவு பாதுகாப்புத் துறை விடுத்துள்ளது. புதுச்சேரியில் விதிக்கப்பட்ட இந்த தீவிர கட்டுப்பாடால் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,000த்தை கடந்தது!

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

அதிகம் பார்க்கும் செய்திகள்