Panaiyur Poltics: தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடிக்கும் பனையூர்... நேற்று விஜய்.. இன்று அன்புமணி

Dec 28, 2024,06:49 PM IST

சென்னை : தமிழக அரசியலில் போயஸ் கார்டன், கோபாலபுரம், ராமாபுரம், தைலாபுரம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது பனையூரும் இடம்பிடித்து வருகிறது. இனி தமிழக அரசியலில் என்ன நடக்கும் என பரபரப்பாக மக்கள் கவனிக்க துவங்கி விட்டனர்.


பனையூர் லைம்லைட்டுக்கு வருவது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பையும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று அதிரடியாக பேசியதால்தான் பனையூர் பக்கம் எல்லோரும் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் விதையை முதலில் போட்டவர்.. நடிகர் விஜய் என்பது முக்கியமானது.


நடிகர் விஜய் மூலம்தான் பனையூர் முதலில் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் பனையூரில்தான் உள்ளது. இதையடுத்து இன்று தனது புதிய அலுவலகத்தை பனையூரில் தொடங்கியிருப்பதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளதால் பனையூர் மேலும் பிரபலமாகியுள்ளது.


கலைஞரின் கோபாலபுரம்




தமிழக அரசியலில் பிரபலமான பெயர் கோபாலபுரம். இது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள இடம். கருணாநிதியின் வீடு அமைந்துள்ளதாகலேயே இது சென்னையின் மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது.


இன்று வரை கோபாலபுரம் லைம்லைட்டில்தான் இருந்து வருகிறது. திமுகவினரின் மெக்கா என்று கூறும் அளவுக்கு கோபாலபுரம் திமுகவினர் மனதில் தனி இடம் பிடித்த ஒரு பகுதி. தமிழ்நாட்டு அரசியலிலும் கோபாலபுரம் பல சரித்திரங்களைக் கண்ட பகுதியும் கூட.


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்




தமிழக அரசியலில் மிக பிரபலமாக பேசப்பட்ட இடங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாக இருப்பது போயஸ் கார்டன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு இங்கு தான் அமைந்துள்ளது. ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் வேதா இல்லம் என அழைக்கப்பட்டு, பிறகு அவரின் அரசியல் என்ட்ரிக்கு பிறகு அரசியலில் மிக முக்கியமான இடமாக போயஸ் கார்டன் என்றே அழைக்கப்படுகிறது.  ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இந்தப் பகுதிக்குள் யாருமே சாதாரணமாக போய் விட்டு வந்து விட முடியாது.


அந்த அளவுக்கு போயஸ் கார்டன் விவிஐபி ஏரியாவாக இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வீடும் இங்குதான் உள்ளது. ரஜினியின் காரையே நிறுத்தி சோதனை போட்டதெல்லாம் அந்தக் காலத்தில் பரபரப்பைக் கிளப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது.


எம்ஜிஆரின் ராமாவரம்




அதேபோல தமிழக அரசியலில் முன்னொரு காலத்தில் மிக முக்கிய பகுதியாக இருந்தது முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வீடு அமைந்துள்ள ராமாபுரம். எம்ஜிஆர் வசித்த வீடு இங்குதான் உள்ளது. இந்தப் பகுதி அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக காரணமே எம்ஜிஆர் வீடுதான்.


எம்ஜிஆர் நடிகராக இருந்தபோதும் சரி, முதல்வராக ஆன பிறகும் சரி இந்த வீட்டுக்கு எப்போதும் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இந்த ஏரியாவின் பெயர் அடிபடுவதே குறைந்து போய் விட்டது.


டாக்டர் ராமதாஸின் தைலாபுரம்




பாமக நிறுவனர் ராமதாசின் இல்லம் அமைந்துள்ள இடம்தான் தைலாபுரம். பாமக அரசியலில் முக்கிய இடம் பிடித்தது முதல் தைலாபுரமும் முக்கியமாக பேசப்படும் இடமாக மாறி விட்டது. குறிப்பாக பாமக மிகப் பெரிய புகழில் இருந்த காலகட்டத்தில் தைலாபுரம் தோட்டத்துக்கு வராத தலைவர்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு பிசியாக இருந்தது.


இத்தனை ஆண்டு கால தமிழக அரசியலில் இந்த நான்கு இடங்கள் தான் மிக முக்கியமானதாக பிரபலமாக பேசப்பட்டு வந்தது. தலைவர்களின் வீடு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக அவர்கள் வசிக்கும் ஏரியாவின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு பலரும் பேசி வரும் கலாச்சாரம் இருந்தது.


விஜய்யின் பனையூர்




இவற்றின் வரிசையில் சமீப காலமாக பிரபலமாகி, மிக முக்கியமான இடமாக, தமிழக அரசியலில் கவனிக்கப்படும் இடமாக மாறி இருப்பது பனையூர். சென்னையின் ஈசிஆர்., எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பனையூர் கடந்த ஆண்டு வரை ஐடி அலுவலகங்கள் இருக்கும் இடமாக மட்டும் தான் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு நிலைமையே தலைகீழாக மாறி உள்ளது. 


இப்போது இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறி உள்ளது. காரணம், நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தன்னுடைய கட்சி அலுவலகத்தை இங்குதான் அமைத்துள்ளார். கட்சி தலைமை அலுவலகம் இங்கு இருப்பதால் பனையூரும் மக்களிடையே பிரபலமாகி விட்டது.


டாக்டர் அன்புமணி




விஜய்யை தொடர்ந்து தற்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியும் பனையூரில் தனக்கென தனியான கட்சி அலுவலகத்தை திறந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநில இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக இருவர் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், மேடையிலேயே இனி தன்னை சந்திப்பதாக இருந்தால் பனையூருக்கு வரும் படி கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி அழைப்பு விடுத்தார். 


விஜய் கட்சி அலுவலகம் அமைந்துள்ளதால் கவனிக்கப்படும் இடமாக மாறி பனையூர், தற்போது அன்புமணியின் அலுவலகமும் அமைய உள்ளதால் அரசியல் விஐபி.,க்களின் அலுவலகம் இருக்கும் இடமாக மாறி உள்ளது.  விஜய், அன்புமணியை தொடர்ந்து அடுத்ததாக பனையூருக்கு ஷிப்ட் ஆக போகும் அரசியல் தலைவர் யார் என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்