"சவுண்டு" ஜாஸ்தியாதான் இருக்கும்.. கண்டுக்காதீங்க.. பாக். வீரர்களுக்கு அட்வைஸ்!

Oct 04, 2023,04:54 PM IST

ஹைதராபாத்: இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் உலகக் கோப்பை வீரர் முஷ்டாக் அகமது ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.


50 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அந்த நாட்டு மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.




பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் 6ம் தேதி விளையாடவுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் அது நெதர்லாந்து அணியைச் சந்திக்கிறது. இதைத் தொடர்ந்து 10ம் தேதி இலங்கையுடன் மோதும். 


அக்டோபர் 14ம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த மைதானத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு முன்னாள் ஜாம்பவான் முஷ்டாக் அகமது சில அறிவுரைகளைக் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவைப் பொருத்தவரை 12 வீரர்களுடன் அந்த அணி விளையாடும். இந்திய அணிக்காக குரல் கொடுத்து எப்போதும் முழக்கிட்டபடி இருக்கும் ரசிகர்கள்தான் அந்த 12வது வீரர்.


கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குரல் கொடுப்பார்கள். எனவே விளையாடும்போது ரசிகர்களின் ஆரவாரம் ஜாஸ்தியாகவே இருக்கும். அதைக் கண்டு பாகிஸ்தான் வீரர்கள் பதட்டமாகி விடக் கூடாது.  இதை எதிர்பார்த்தே விளையாடச் செல்ல வேண்டும். பல வீரர்கள் இந்தியாவில் முதல் முறையாக விளையாடுகிறார்கள். அவர்கள் தங்களது ஃபோகஸை இழந்து விடாமல் நிதானமாக ஆட வேண்டும்.


பாகிஸ்தான் அணியால் எந்த சூழலையும் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். எனவே சிறந்த வெற்றியை அந்த அணியைப் பெறும் என்றும் நம்புகிறேன் என்றார் முஷ்டாக் அகமது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்