பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

Apr 02, 2025,06:24 PM IST

கராச்சி: பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கராச்சியிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நவாப்ஷா என்ற இடத்தில் நடந்த ரம்ஜான் விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார் சர்தாரி.  ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதன் பிறகு கட்சி தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.




இதையடுத்து அவர் உடனடியாக கராச்சிக்கு அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சலும் தொற்றும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிபர் சர்தாரிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.


69 வயதான சர்தாரி, மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்