விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் 24வது மாநில மாநாட்டின்போது பெ. சண்முகம் புதிய மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தது. 3வது நாளான இன்று முக்கிய நிகழ்வாக புதிய மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. கட்சியின் 80 உறுப்பினர்கள் அடங்கிய மாநிலக் குழுக் கூட்டத்தில் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது கே.பாலகிருஷ்ணன் 2வது முறையாக மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு தரப்பட மாட்டாது என்று கூறப்பட்டது. 3 முறை ஒருவர் மாநிலச் செயலாளராக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று புதிய செயலாளராக பெ.சண்முகம் தேர்வாகியுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் பெ.சண்முகம். மாணவர் சங்கத்தில் ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தவர் சண்முகம். பின்னர் படிப்படியாக பல்வேறு நிலைகளில் உயர்ந்து வந்த அவர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக உள்ளார்.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் சண்முகம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் விவசாய பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர். வாச்சாத்தி போலீஸ் அத்துமீறல் வழக்கை நீண்ட காலம் விடாமல் நடத்தி வந்தவர் பெ. சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது. மலை வாழ் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி வருபவர்.
விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பொலிட்பீரோ ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், பொலிட்பீரோ உறுப்பினர்கள் பிருந்தா காரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில மாநாட்டில் பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஹைதராபாத் தியேட்டர் நெரிசலில் சிக்கி உயிருக்குப் போராடும் சிறுவன்.. சந்தித்தார் அல்லு அர்ஜூன்
துணைவேந்தர் நியமனம்.. யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
ஆளுநர் ஆர். என். ரவியைக் கண்டித்து.. திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு!
அதிரடி காட்டிய தங்கம் விலை... நேற்றும் இன்றும் அமைதியோ அமைதி.. நம்பாட்டியும் அதான் நெசம்!
டெல்லி சட்டசபை தேர்தல் 2025 எப்போது?... இன்று பிற்பகல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்
தெலுங்கு சினிமாவைத் துரத்தும் துயரம்.. கேம்சேஞ்சர் விழாவுக்கு வந்த 2 ரசிகர்கள் விபத்தில் பலி!
நேபாளத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் பூகம்பம்.. பலர் பலி.. டெல்லியும் ஆடியதால் மக்கள் அதிர்ச்சி
சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா.. 6 நாள் கோலாகலம்!
என்னாது நயன்தாரா கிட்ட ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டோமா.. சிவாஜி புரடக்ஷன்ஸ் மறுப்பு!
{{comments.comment}}