டெல்லியிலும் ஓட்டைப் பிரித்த AIMIM ஓவைசி.. பாஜகவுக்கு 1 சீட் எக்ஸ்ட்ரா கிடைக்க இவரும் காரணம்!

Feb 09, 2025,04:55 PM IST

டெல்லி: பாஜகவுக்கு சாதகமாக ஓட்டைப் பிரித்து வருகிறார் அசாதுதீன் ஓவைசி என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் ஓவைசியின் கட்சி 2 தொகுதிகளில் ஓட்டைப் பிரித்து, அதில் ஒரு இடம் பாஜகவுக்குக் கிடைக்க மறைமுக காரணமாகியுள்ளது.


ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியானது, வட மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமாக, மறைமுகமாக ஓட்டைப் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக ஒரு பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதை அசாதுதீன் மறுத்து வருகிறார். முஸ்லீம்களின் பிரதிநிதியாக நாங்கள் இருக்கிறோம். அப்படி போட்டியிடுவதை எப்படி தவறு என்று சொல்ல முடியும் என்று அவர் கேட்டு வருகிறார். ஆனால் அவரது கட்சி வாக்குகளை கணிசமாக பிரிப்பதால் அது பாஜகவுக்கே சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.




இந்த நிலையில் டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்துள்ளது ஓவைசியின் கட்சி. டெல்லி தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் ஆகிய இரு தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிட்டது. ஓக்லாவில் ஷிபா உர் ரஹ்மான் போட்டியிட்டார். முஸ்தபாபாத்தில்  தாஹிர் ஹுசேன் போட்டியிட்டார். இருவரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். ஆனால் இந்த இருவரும் பிரித்த வாக்குகள், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு்ப பாதகமாகியுள்ளன, பாஜகவின் வெற்றிக்கு உதவியுள்ளன. 


இந்த இரு வேட்பாளர்களும் 2020ல் நடந்த டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். தேர்தலில் போட்டியிட்ட இருவரும் கோர்ட் அனுமதியுடன் பிரச்சாரம் செய்தனர்.  இரு தொகுதிகளிலும் ஓவைசி கட்சி வேட்பாளர்கள் 3வது இடத்தைப் பிடித்தனர். காங்கிரஸ் கட்சி 4வது இடத்தையே பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஓக்லா ஆம் ஆத்மிக்கு - முஸ்தபாபாத் பாஜகவுக்கு




ஓக்லா தொகுதியில் ஆம்ஆத்மி சார்பில் தற்போதைய எம்எல்ஏ அமனத்துல்லா கான் போட்டியிட்டார். அவர் 23,639 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் இன்னும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்க முடியும். ஆனால் ஓவைசி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட  ஷிபா உர் ரஹ்மான் கான் 39,558 வாக்குகளைப் பெற்று ஆம் ஆத்மியின் பிரமாண்ட வெற்றியை சுருக்கி விட்டார். காங்கிரஸ் வேட்பாளர் அரிபா கானுக்கு 12,739 வாக்குகளே கிடைத்தன.  பாஜக வேட்பாளர் மனீஷ் செளத்ரி 2வது இடம் பிடித்தார்.


முஸ்தபாபாத்தில் ஓவைசி கட்சி பிரித்த வாக்குகளால் பாஜக ஈஸியாக ஜெயித்து விட்டது. இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கும் மேல் முஸ்லீம்கள்தான் வசிக்கின்றனர். ஆனால் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட இந்து வேட்பாளரான மோகன் சிங் பிஷ்த் ஈஸியாக  ஜெயித்துள்ளார். அதற்குக் காரணம் ஓவைசி கட்சிதான். 


இங்கு ஆம் ஆத்மி சார்பில் அடீல் அகமது கான் போட்டியிட்டு 67,637 வாக்குகள் பெற்றார். ஓவைசி கட்சி வேட்பாளர் தாஹிர் ஹுசேன் 33,474 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அலி மெஹதி 11,763 வாக்குகளைப் பெற்றார். ஓட்டுக்கள் பிரிந்ததால் பாஜக வேட்பாளர் பிஷ்ட், 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து விட்டார்.


முஸ்லீம் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், ஓவைசி கூட்டணி வைத்திருந்தால் பாஜகவுக்கு சிக்கலாக போயிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏகப்பட்ட விஷயங்களில் ஓட்டை விழுந்த காரணத்தால்தான்  டெல்லி கோட்டையைப் பறி கொடுத்திருக்கிறது ஆம் ஆத்மி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில்.. இரண்டே முக்கால் மணி நேரம் விஜய்யுடன் தீவிர ஆலோசனை நடத்திய.. பிரஷாந்த் கிஷோர்!

news

டெல்லி முதல்வராக மீண்டும் ஒரு பெண்.. பாஜகவின் திட்டம் இதுதான்.. பதவியேற்பு விழா எப்போது?

news

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தில்.. நாளை தொடங்கி.. 3 நாட்கள் விறுவிறு ஜல்லிக்கட்டு!

news

பெரியாரை ஏற்க மாட்டேன்.. இப்பதான் தொடங்கியுள்ளேன்.. போகப் போக நிறைய உள்ளது.. சீமான்

news

ரேஸ் டீம் பெண்ணின் ஷூ லேஸை கட்டி விட்ட அஜீத் குமார்.. அஜீத்தே அஜீத்தே.. கொண்டாடும் ரசிகர்கள்

news

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி.. சென்னையில் விரைவில் போராட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

news

சொத்தைப் பிரித்துத் தராத தொழிலதிபர் தாத்தா.. 73 தடவை கத்தியால் குத்திய கொடூர பேரன்!

news

ஈரோடு கிழக்குத் தொகுதி..எம்எல்ஏவாக பதவியேற்றார் விசி சந்திரகுமார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அதிகம் பார்க்கும் செய்திகள்