திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில், கடந்த 20 மணி நேரத்தில் 50 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழை கொட்டி தீர்த்துள்ளது. நாலுமுக்கு, தெற்கு வீரவநல்லூர், சீதபற்பநல்லூர் பகுதியில் 26 செ.மீ மழை பதிவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் நெல்லையில் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில், கடந்த 20 மணி நேரத்தில் 50 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழை கொட்டி தீர்த்துள்ளது. நாலுமுக்கு, தெற்கு வீரவநல்லூர், சீதபற்பநல்லூர் பகுதியில் 26 செ.மீ மழை பதிவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. சாலைகளில் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் செய்வது அறியாது திணறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியிலும், நெல்லையிலும் 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இது குறித்த தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகையில், திருநெல்வேலியில் 20 செ.மீக்கும் அதிகமாகவும், மணிமுத்தாறு அணை பகுதியில் 30 செ.மீக்கும் அதிகமாகவும், மாஞ்சோலை பகுதியில் 40 செ.மீக்கும் அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவிர நெல்லையின் ஊத்து பகுதியில் 50 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மழை காரணமாக அப்பகுதிகள் முழுவதிலும் உள்ள சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் இன்றும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆங்காங்கே உள்ள ஓடைகள், காட்டாறுகள் மூலம் வரும் மழைநீர் ஆற்றில் செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் எந்த நீர் நிலைகளிலும் இறங்க வேண்டாம். மின்கம்பங்கள் மரங்கள் அருகில் செல்ல வேண்டாம். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்திட வேண்டும். குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருக வேண்டும்.
அவசர உதவி எண்கள் அறிவிப்பு
இதற்கிடையே, கன மழை தொடர்ந்து வருவதால், மழைக்கால அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கு 1077, 0462-2501012
மாவட்ட காவல்துறைக்கு 0462-2562500, 99527 40740
மாநகர காவல்துறைக்கு 0462 - 2562651, 89399 48100
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவிக்கு 0462- 2572099,73050 95952
மின்சாரம் தொடர்பாக புகார்களுக்கு 94987 94987
மருத்துவ உதவிக்கு 108, 104க்கும்
மாற்றுத்திறனாளிகளின் உதவி மையத்திற்கு 0462-2573267 க்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
Out of control இல்லை.. Out of cantact.. முதல்வர் பேச்சுக்கு அண்ணாமலை அதிரடி பதில்!
உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
{{comments.comment}}