சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற ஓட்டேரி சிவா கண்ணீர் சொட்ட சொட்ட செய்து ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டிஷோ, சீரியல் என பார்வையாளர்களை பரபரப்பாக வைத்திருக்கும் விஜய் டிவி சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கோலாகலமாக முடிவுக்கு கொண்டுவந்தது. அடுத்த கவர்ச்சிகரமான ஐட்டமான குக் வித் கோமாளியை தற்போது களம் இறக்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் ஃபேவரெட் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. 1வது சீசன் சுமாராக ஓடிக்கொண்டிருந்த குக் வித் கோமாளி, சீசன் இரண்டில் செமையாக பிக் அப் ஆனது. குக் வித் கோமாளி பார்த்தால் தான் அந்த வாரமே முழுமைபெறும் என சொல்லும் அளவிற்கு அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெறும் நிகழ்ச்சி மட்டுமல்லாமல் அதில் பங்குபெறும் கோமாளிகளுக்கு வாழ்கை தரும் நிகழ்ச்சியாகவும் விளங்கியது. குக் வித் கோமாளி ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் புகழ், ஷிவாங்கி, பாலா, தர்ஷ குப்தா, அஸ்வின், ரம்யா பாண்டியன் என பலருக்கும் வாழ்க்கையில் அடுத்த படி வைப்பதற்கு ஒரு படிக்கட்டாக இந்நிகழ்ச்சி அமைந்து.
மூன்று சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தனது நான்காவது சீசனை கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதில், பங்குபெறும் குக் பலரும் புதுமுகங்களாய் அறிமுகமாகினர், ஆனால் கோமாளிகள் சிலர் புது முகங்களும், சிலர் முந்தய சீசனில் பங்குபற்றவர்களாக ஒரு கலவையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியது.
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4-இல் யூடியூப் மூலம் மிகவும் பிரபலமான ஓட்டேரி சிவா கோமாளியாக அறிமுகமானார். குக் வித் கோமாளி சீசன் 4-இல் முதல் வாரத்தில் கோமாளியாக அறிமுகமான ஓட்டேரி சிவா இரண்டாவது வாரத்தில் ஆளை காணோம்.. ரசிகர்கள் பலர் எங்கப்பா எங்க தலைவன் என தேடினர்.. சிலர் அச்சச்சோ ஓட்டேரி சிவாவை தூக்கிட்டாங்களா! என கமெண்டும் செய்தனர்.
இப்படியாக பலதரப்பட்ட கமெண்ட் வலம் வந்த நிலையில் ஓட்டேரி சிவா செய்து ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், நிகழ்ச்சியில் இருந்து ஏன் உங்களை நீக்கினார்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓட்டேரி சிவா "என்னை யாரும் நிகழ்ச்சியில் இருந்து நீக்கவில்லை, விரைவில் அழைக்கிறோம் எனவும் கூறியுள்ளனர். மேலும் என்னை பற்றி தவறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள்" என்றும் கண்ணீர் சொட்ட சொட்ட பதில் அளித்தார்.
{{comments.comment}}