சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தற்போது வெக்கை தணிந்து சற்று குளுமையான சூழல் நிலவி வருகிறது. அதே வேளையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்க உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், வங்க கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்பதால் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!
அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!
பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?
Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!
தம்பி விஜய் கூட இருக்கிற ரசிகர்களில் பாதிப் பேர்.. எனக்குதான் ஓட்டுப் போடுவாங்க.. சீமான்
இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்.. 2026ல் நமது இலக்கை அடைவோம்.. தவெகவினருக்கு விஜய் அழைப்பு!
Deepavali: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு.. நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
ரூ. 98 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து.. ரூ. 426 கோடி திட்டங்களைத் திறந்து வைத்த.. முதல்வர் ஸ்டாலின்
{{comments.comment}}