திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்: நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Nov 01, 2024,04:57 PM IST

சென்னை:   தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பரவலாக பெய்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.




இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (1.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  


நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நவம்பர் இரண்டாம் தேதி அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொருத்த வரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.


இன்றும் நாளையும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்: நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

news

அரசுடன் சங்கடம் இருப்பது உண்மை தான்...என்ன இப்படி சொல்லிட்டாரு செல்வ பெருந்தகை?

news

கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால் சஸ்பெண்ட்.. ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

news

Devayani.. நீண்ட இடைவேலைக்கு பிறகு நாயகியாக தேவயானி நடிக்கும் .. நிழற்குடை!

news

2 போட்டு 34 ஜீரோ போட்டுக்கங்க... கூகுளுக்கு பயங்கரமான அபராதம் விதித்த ரஷ்ய அரசு.. என்னாச்சு??

news

அமரன் படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு.. கமல்ஹாசன் நன்றி!

news

ராமநாதபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்.. நவம்பர் 3ம் தேதி.. ரிசர்வேஷன் ஓபன் ஆயிருச்சு!

news

3 நாட்களில் 5.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம்.. பட்டையைக் கிளப்பிய கிளாம்பாக்கம்!

news

AIADMK.. நவ. 6ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் மாநாட்டு தாக்கம் இருக்குமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்