திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ள தீபத் திருவிழாவை முன்னிட்டு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் மகா தீபத் திருவிழா மிகவும் விசேஷமானது. அதிலும் அக்னி ஸ்தலம் ஆன திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கார்த்திகை தீபத்தை தரிசித்தால் வாழ்வில் மறுபிறவி என்பதே கிடையாது என்ற பக்தர்களின் நம்பிக்கைக்கு இணங்க திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண கோடிக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவர்.
இதற்கிடையே திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தீபம் ஏற்றும் மலை அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்ததில் சிக்கி நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.பின்னர் ஏழு பேர் உடல்களும் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இரண்டு முறை தீபமேற்றும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வருடம் நடைபெறும் தீபத் திருவிழாவில் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் தீபம் ஏற்றும் மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் பாதைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் மண் செலவு ஏற்பட்ட இடத்தில் இன்று ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் பொன்னுசாமி, இயக்குனர் சரவணன், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி பாலாஜி, என மூன்று பேர் கொண்ட மத்திய குழுக்கள் மண்சரிவு ஏற்பட்டது எப்படி.. அதற்கு காரணம் என்ன.. என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
டிசம்பர் 13ம் தேதி மகா தீபம்
இருப்பினும் திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கடந்த டிசம்பர் நான்காம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.அந்த வரிசையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து டிசம்பர் 13ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது அதே சமயத்தில் இந்த பேருந்து நிலையங்கள் கிரிவலப் பாதையை இணைக்கும் வகையிலும் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படுகிறது.
மேலும் திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழாவை காண சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வர இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது கார்த்திகை தீபத்திருநாள் 13 ஆம் தேதி ,14ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம், 12ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2025ல் இயற்கை கோரத்தாண்டவமாடும்.. அரசியல் கலகங்கள் தலைதூக்கும்.. ஜோதிடர் சிவ.ச நடராஜ தேசிகர் கணிப்பு
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை என்ன தெரியுமா?
Gold rate.. ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை... தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!
இயக்குநர் சீனு ராமசாமியும் டைவர்ஸ்.. 17 வருட திருமண வாழ்விலிருந்து விடைபெறுவதாக அறிவிப்பு!
HBD Rajinikanth.. 75வது பிறந்த நாள்.. தலைவர்கள், திரையுலகின் வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 12, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
{{comments.comment}}